"எல்.ஐ.கே" பட விழாவில்.. "கருப்பு" படத்தின் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே. பாலாஜி

சென்னை,

நடிகர் சூர்யாவின் 45-வது திரைப்படம் ‘கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூர்யா வக்கீலாக நடித்துள்ள இந்த படத்தில் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ரிலீஸ் பல நாட்களாக தள்ளிப்போன நிலையில், வருகிற மே மாதம் 14-ந்தேதி ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற “எல்.ஐ.கே” (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, “கருப்பு திரைப்படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. தமிழ் புத்தாண்டுக்குள் படத்தின் அடுத்த பாடல் வெளியாகும்,” என்று தெரிவித்துள்ளார்.

Source link