மனைவியை போலீஸ் கண்முன்னே குத்தி கொன்ற கணவன்..!

தெலுங்கானா மாநிலம் ஜஹீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் சித்த ரெட்டி. பிசினஸ் செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா(29). கடந்த சில தினங்களாக கணவன் மனைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மார்ச் 28 தேதி கவிதா திடீர்னு காணாமல் போனார். அவருடைய போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சித்த ரெட்டி ஜஹீராபாத் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கவிதா தனது ஆண் நண்பரான பவன் குமார் என்பவருடன் ஜட்செர்லா பகுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது.. கவிதா இருந்த இடத்திற்கு சித்த ரெட்டியையும் போலீஸார் தங்களோடு அழைத்துச் சென்றார்கள்.

கவிதாவை மீட்ட போலீஸார் காரில் மீண்டும் ஜஹீராபாத் நோக்கிப் பயணம் செய்தார்கள்.. காரின் முன் சீட்டில் போலீஸார் உட்கார்ந்திருக்க, பின் சீட்டில் கவிதாவும் சித்த ரெட்டியும் உட்கார்ந்து வந்துள்ளனர். அப்போது சித்த ரெட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவிதாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் துடித்த கவிதாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஜஹீராபாத் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் கூறுகையில், அடையாளத்திற்காகவே கணவரை கூப்பிட்டு சென்றோம். ஆனாலும் ஒரு குற்றவாளியைப் போல கணவர் செயல்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.

சித்த ரெட்டியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் முன்னிலையில் நடந்த இந்த கொலை சம்பவம் பாதுகாப்பு குறைபாடு குறித்த கேள்வி எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Post

Wed Apr 8 , 2026

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை முதல்வர் கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பது உண்மை தான் […]

eps campaign n

Source link