“ஜாக்கிரதையா இருக்கணும்..” நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்களுக்கு ரஜினி அட்வைஸ்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.. அப்போது அவரிடம் செய்தியாளர்கள், இன்றைய காலக்கட்டத்தில் நடிகர்கள் பின்னால் சென்று விபத்தில் சிக்கும் தமிழக இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன என்று கேள்வி எழுப்பினர்..

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் “ இளைஞர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயம்பட்டால் உங்களுக்கு தான் ஆபத்து.. படிக்க வேண்டிய வயத்தில் படிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும்.. படிக்கும் காலத்தை விட்டால் அதன்பின்னர் வாழ்க்கையில் கஷ்டப்பட நேரிடும்.. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. குடிப்பழக்கம், கஞ்சா இதையெல்லாம் இளைஞர்கள் தொடவே கூடாது..

வாழ்க்கையே கெட்டு போய்விடும். போதைப் பழக்கத்தோடு நண்பர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் இருந்து விலகியே இருங்க.. இந்த பழக்கம் இருந்தால் வாழ்க்கையே கெட்டுப் போய்விடும்.. உங்கள் வாழ்க்கையை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையையும் நரகமாக்கிவிடுவீர்கள்.” என்று தெரிவித்தார்..

ஜனநாயகன் படம் முடக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் “ Sorry.. பதிலளிக்க விரும்பவில்லை..” என்று தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே அவர் பொதுக்கூட்டங்கள் அல்லது பிரச்சாரத்திற்கு செல்லும் போது அவரின் ரசிகர்கள் ஆபத்தான முறையில் அவரின் வாகனத்தை பின் தொடர்ந்து செல்கின்றனர்.. அப்படி செல்லும் விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்த விபத்துகளில் சில நேரங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது.. சமீபத்தில் கூட தஞ்சையில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு விஜய் சென்ற போது அவரின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கினார்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இதே போல் பல்வேறு விபத்துகள் நடந்து வருகின்றனர்.. இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்தின் அட்வைஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..

Read More : அதிமுக பரப்புரையில் ஒலித்த ‘ஸ்டாலின் தொடரட்டும் பாடல்’.. உடனே இபிஎஸ் கொடுத்த ரியாக்‌ஷன்..! வைரல் வீடியோ..!



Source link