சென்னை,
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது;-
“பிரதமர் மோடி சமீபத்தில் மலேசியா நாட்டிற்கு சென்றிருந்தபோது, இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டைப் பற்றியும், 5 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மொழியைப் பற்றியும் பேசியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என மலேசியாவில் பிரதமர் மோடி தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் பெருமை பற்றி பேசியுள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசைப் பார்த்து முட்டை, ஒன்றுமே இல்லை, டபுள் இன்ஜின் டப்பா இன்ஜின் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறாரே தவிர, தி.மு.க. வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் 5 ஆண்டு காலத்தில் நிறைவேற்றவில்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
