சென்னை மண்டலத்தில் பெரிதும் கவனம் பெற்றுள்ள தொகுதியாக வில்லிவாக்கம் மாறியிருக்கிறது. ஏனெனில் ஸ்டார் வேட்பாளராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா களமிறங்கியுள்ளார். இவருக்கு திமுகவின் முதல் குடும்பத்திற்கு நெருக்கமான கார்த்திக் மோகம் போட்டியிடுகிறார்.
வில்லிவாக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்
இன்னும் சொல்லப் போனால் சபரீசன், ஆதவ் அர்ஜுனா, கார்த்திக் மோகன் ஆகிய மூவரும் தொழில் ரீதியாக ஒருகாலத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டவர்கள். இந்த சூழலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் எதிரெதிராக போட்டியிட வைத்திருக்கிறது. அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.விஜயகுமாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. எனவே இந்த தொகுதியை பொறுத்தவரை மும்முனைப் போட்டியாகவே காணப்படுகிறது. இந்நிலையில் வில்லிவாக்கம் தொகுதியில் Field Reporting செய்து கொண்டிருக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஓம் ஜஸ்வின் சமயம் தமிழ் எடிட்டர் ஸ்டீபனுடன் பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
நீங்க வேணா பாருங்க…இது தான் நடக்கப்போது! அந்த 21 தொகுதி தான் டிவிஸ்ட்! paraman
அண்ணா நகர் டூ வில்லிவாக்கம் – கார்த்திக் மோகன் மாறிய பின்னணி
அவர் பேசுகையில், கடந்த 11 சட்டமன்றத் தேர்தல்களில் 8 முறை திமுக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. எனவே திமுகவின் கோட்டை என்றே கூறலாம். தற்போதைய சூழலில் கட்சி கட்டமைப்பு மிகவும் வலுவாக இருக்கிறது. திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தனது அரசியல் வாழ்க்கை முழுவதிலும் அண்ணா நகரில் தான் களப்பணி ஆற்றியுள்ளார். ஆனால் இந்த தொகுதியை சிற்றரசுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தால் கார்த்திக் மோகனுக்கு வில்லிவாக்கம் தொகுதி அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஆதவ் அர்ஜுனாவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தலைமை களமிறக்கியது.
| வ.எண் | வேட்பாளரின் பெயர் | சாதகமான அம்சங்கள் |
| 1 | கார்த்திக் மோகன் | திமுகவின் அமைப்பு பலம், இடதுசாரிகள், விசிகவிற்கு கணிசமான வாக்குகள், அண்ணா நகர் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் (Anna Nagar Premier League Contest), இளைய தலைமுறையை கவரும் வகையில் பிரச்சாரம் |
| 2 | ஆதவ் அர்ஜுனா | தவெக என்ற பின்புலம், விஜய்க்கு இருக்கும் மாஸ், விசில் சின்னத்திற்கான வரவேற்பு, இளைஞர்களின் வாக்குகளை கவர விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம், மீடியாவில் பிரச்சினைகளை உடனுக்குடன் கொண்டு செல்லுதல் |
| 3 | எஸ்.ஆர்.விஜயகுமார் | 2014 மக்களவைத் தேர்தலில் தயாநிதி மாறனை தோற்கடித்து எம்.பி ஆனவர், வில்லிவாக்கத்தில் அதிக வாக்குகள், கூட்டணி பலம், கோயில் பகுதிகளில் இந்துக்களின் வாக்குகளை கவருதல் |
ஆதவ் அர்ஜுனாவை தோற்கடிக்க திமுக வியூகம்
திமுகவை ஆதவ் அர்ஜுனா மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். எனவே இவரை சைலண்ட் ஆக்க தேர்தல் வெற்றி தான் சரியாக வழி எனக் கருதி, அதற்கேற்ப காய் நகர்த்தி வருகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், வில்லிவாக்கம் தொகுதியில் கார்த்திக் மோகன், ஆதவ் அர்ஜுனா என இருவருக்குமே செல்வாக்கு கிடையாது. கட்சி தான் அடையாளமாக திகழ்கிறது. வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள மக்கள் நிரந்தர வீட்டை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
ஏனெனில் உழைக்கும் அடிதட்டு மக்களாக இருப்பதால் போதிய இருப்பிட வசதிகள் இல்லை. கழிவுநீர் கலந்த தண்ணீர் பெரிய பிரச்சினையாக உள்ளது. சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே செய்யவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
