“என்னை எதிர்ப்பவர்களால் இதை தைரியமா, கெத்தா சொல்ல முடியுமா..? திமுக, அதிமுகவுக்கு விஜய் சவால்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தவெக தலைவர் விஜய் இன்று நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமான தேர்தல் இல்லை.. இது ஒரு அதிசய தேர்தல்.. நம்ம தவெக ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நல்லா இருப்போம்.. விவசாயிகள், மீனவர்கள் நல்லா இருப்போம்.. அதனால் தான் பார்த்து பார்த்து வாக்குறுதிகளை அறிவித்து வருகிறோம்..

செய்ய முடியாததை சொல்ல மாட்டோம்.. செய்வதை மட்டுமே சொல்வோம், சொல்லாததையும் செய்வோம்.. மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் இப்போது ஆண்டு கொண்டிருப்பவர்கள் இதற்கு முன்பு ஆண்டவர்கள், மக்கள் காசில் இருந்து ஒரு பைசா கூட தொட மாட்டேன் என்று தில்லாக சொல்ல முடியுமா..? என்னை எதிர்ப்பவர்கள் தில்லாக, கெத்தாக கட்ஸாக இதை சொல்ல முடியுமா..?

நீங்கள் நன்றாக ஆட்சி நடத்தினால் பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை..? சட்டம் ஒழுங்கு இவ்வளவு சீர் குலைந்துள்ளது.. இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி கொன்றானே அதற்கு பதில் என்ன? இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய சிறுமி உயிர் பறி போனது? இதற்கு பதில் என்ன ஸ்டாலின் சார்..? போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தாது ஏன்?

ஊழல், ஊழல் என்று ஊறி போய் கிடக்குது.. எந்த முகத்தை கொண்டு வந்து சார் ஓட்டு கேட்பீங்க.. இந்த தேர்தலில் உங்கள் பணத்தை ஒன்றும் செய்ய முடியாது.. இது மாற்றத்திற்கான தேர்தல்.. இது திமுகவால் அல்லது மற்றும் பலராலும் தடுக்க முடியாது.. எனவே மக்களே ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.. இது விசில் புரட்சி தேர்தல்..

உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.. அனைத்து வலிகளையும் தாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்.. ஒருநாளும் உங்களை ஏமாற்றமாட்டேன்.. 4 முனை போட்டி, 40 முனை போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியே.. இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்க.. உங்க விஜய் நான் வரேன்.. விசில் அடிக்க ரெடியா..? நம்பிக்கையோடு இருங்க.. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்..

Read More : “திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து போய் உள்ளது.. அதான் நம் மீது காண்டு..” விஜய் பேச்சு..!

Source link