தொடர்ந்து ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், திருவைகுண்டம், சங்கரன்கோயில், வாசுதேவநல்லூர்,கடையநல்லூர்,தென்காசி,ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம் உள்ளிட்ட தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து விஜய் மேடையில் பேச ஆரம்பித்தார், “நெஞ்சில் குடியிருக்கும் என விஜய் பேசத் தொடங்கியதுமே தொண்டர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க தொடங்கியது.
“திமுக கையில் முழு ஆட்சி அதிகாரம் இல்லை தேர்தல் ஆணையத்திடம் அதிகாரம் இருக்கிறது. ஒருவேளை ஸ்டாலினிடம் அதிகாரம் இருந்திருந்தால் இந்த கூட்டம் நடந்திருக்காது. அவருக்கு அதிகாரம் இல்லாததால் தான் நம்மால் எளிதில் இந்த கூட்டத்தை நடத்த முடிந்தது என்ன பேசி இருக்கிறார்.
பாஜக திமுக ஒன்றுதான்
தொடர்ந்து திமுகவை விமர்சித்த விஜய் பாஜகவும் திமுக கூட்டணியும் வெளியில் வேறு வேறாக இருந்தாலும் உள்ளே ஒரே கூட்டணி தான் என விமர்சித்திருக்கிறார். மக்களோடு நிற்க விஜய் வரக்கூடாது என்பதில் திமுக பாஜகவின் கள்ளக் கூட்டணி உறுதியாக இருக்கிறது என விமர்சித்து இருந்தார். “விஜய் வந்ததுல இருந்து ஊழல் செய்ய முடியவில்லை. கொள்ளையடித்த பணத்தை எல்லாம் வைத்து கல்லாப்பெட்டி கூட்டணி என்ற ஒன்றை உருவாக்கி இருந்தார் அது அனைத்துமே தற்போது கலகலத்து போயிருக்கிறது இதனால் என் மீது கோபத்தில் இருக்கின்றனர்” எனவும் விமர்சித்திருந்தார்.
திமுக காங்கிரஸ் உறவு குறித்து விமர்சனம்
தொடர்ந்து பேசிய விஜய் “திமுக கூட்டணியில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் ஓட்டு போட்டுக்கொள்ள மாட்டார்கள் போல் இருக்கிறது அந்த மாதிரி இருக்கு அவர்களின் கூட்டணி நிலைமை” என விமர்சித்த அவர் “சில பல amount -களை கொடுத்து காங்கிரஸ் கூட்டணியை திமுக தன்னுடன் வைத்துக்கொண்டதாகவும்,ஆனால் உண்மையான காங்கிரஸ் தமிழக வெற்றி கழக பக்கம் நிற்கிறது” எனவும் அவர் பேசியுள்ளார்.
விஜய் பேசியதன் பின்னணி என்ன?
விஜய் கட்சி தொடங்கிய நாளிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய சில எம்பிக்கள் விஜய்க்கு ஆதரவான தங்களின் நிலைப்பாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
- ஜனநாயகன் பட விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு முன்பாகவே காங்கிரஸ் விஜய்க்கு தனது ஆதரவை கொடுக்க தொடங்கியது.
- திமுக காங்கிரஸ் கூட்டணி இழுபறியாக மாறியதற்கு முக்கிய காரணம் தவெக வருகைதான் என பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
- தவெக உடன் சென்று விடுவோம் என காங்கிரஸ் மிரட்டியே திமுகவிடமிருந்து 28 எம்.எல்.ஏ சீட்டுகளை பெற்றதாகவும் சில விமர்சனங்கள் தொடர்ச்சியாக இழந்த வண்ணமே இருக்கின்றன.
- கூட்டணி அமைந்த பிறகும் கூட காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி திமுகவுடன் இணக்கமான உறவை மேற்கொள்ளவில்லை
- புதுச்சேரியிலும் ஸ்டாலினும் ராகுல் காந்தியும் தனித்தனியே பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜென் Z தலைமுறையினரை அதிகம் விரும்பும் ராகுல் காந்தி இளம் தலைமுறைகளின் அரசியலையே முன்னெடுக்க விரும்புவதால் அவர் திமுக கூட்டணி முறித்துக் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைக்க விரும்பினார் என்ற கருத்துக்கள் நிலவியது
- மேலும் சமீபத்தில் தவெக நிர்வாகி ஆதார் அர்ஜுனா அளித்த பேட்டியில் தவெக கட்சியுடன் கூட்டணி வைக்கவே ராகுல் காந்தி விரும்பினார் என பகிரங்கமாக பேசியிருக்கிறார்.
- இந்த சூழலில் தான் இன்றைய தினம் விஜய் தனது தேர்தல் பரப்புரையில் திமுக காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்.
மேலும் உண்மையான காங்கிரஸ் கட்சி தங்களின் பக்கம் நிற்பதாக கூறுவதன் மூலம் விஜய் குறிப்பு விடுவது ராகுலைத்தான் என புரிந்து கொள்ளலாம் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். அதிலும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் திமுகவின் தலையீடு இருப்பதாகவும் பேசி வருகின்றனர்.
இந்த சூழலில் விஜய் இந்த கூட்டணி விவகாரங்கள் குறித்து பேசி இருப்பது அரசியல் களத்தில் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
