லீமா ரோஸிடம் அதிமுகவை விற்றுவிட்டார் இபிஎஸ் – கு.ப.கிருஷ்ணன்! – eps sold admk to leema rose lalgudi says tvk candidate k p krishan

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, அனைத்து கட்சி வேட்பாளர்களும் பரபரப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் கே.பி.கிருஷ்ணன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, தமிழகத்தில் லாட்டரி வியாபாரம் தடை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

அதேபோல், பிரபல லாட்டரி வியாபாரி மார்ட்டினை கைது செய்ய வைத்ததும் ஜெயலலிதா தான். ஆனால், தற்போது நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக லால்குடி தொகுதியின் அதிமுக வேட்பாளராக லாட்டரி வியாபாரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். இதிலிருந்து இபிஎஸ் அதிமுகவை லீமா ரோஸிடம் விற்றுவிட்டார் என்று கிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

யார் இந்த லீமா ரோஸ்?

லாட்டரி தொழிலில் கொடிகட்டிப் பறந்த சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி தான் லீமா ரோஸ் மார்ட்டின். இவருடைய குடும்பத்தினர் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளனர். இந்நிலையில் அதிமுகவில் சமீபத்தில் சேர்ந்த லீமா ரோஸ் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்

இதற்கிடையில், லீமா ரோஸ் இதுவரை இல்லாத அளவில் 164 பக்கங்கள் கொண்ட வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் லீமா ரோஸ் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்தது.

அதாவது, அவரது பெயரில் மட்டுமே 139.65 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 909.94 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமாக, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுக்கு சொந்தக்காரரான லீமா ரோஸ் தமிழ்நாட்டிலேயே பணக்கார வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

லீமா ரோஸ் குடும்பத்தின் சொத்து விபரம்

மேலும், அவரது கணவர் பெயரில் 3,262 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், 887 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளும்; அவர் மகன் ஜோஸ் டைசன் என்பவர் பெயரில் ரூ. 662 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலமாக, அவரது குடும்ப மொத்தாக கிட்டத்தட்ட 6000 கோடி ரூபாய் உள்ளதாக லீமா ரோஸ் தெரிவித்து உள்ளார்.

லீமா ரோஸ் மார்டின் சொத்து மதிப்பு என்ன?

ஆதவ் அர்ஜுனாவின் மாமியார்

லீமா ரோஸ் வேரு யாருமல்ல, தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் தான். அதே வேளையில், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் லீமா ரோஸின் மூத்த மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோஸ் சார்லஸ் நாளை புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பு என இரு தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

Source link