காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடுகிறது.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை, நாளை காலை (09.04.2026) சுமார் 11:00 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் வெளியிடப்படும்.

அதன் முதல் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக்கொள்வார். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி ப. சிதம்பரம் தொடக்கவுரை ஆற்றுவார். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்வார்கள்.

முன்னதாக, முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆனந்தன் அவர்களின் முதலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு மரியாதை செய்யப்படும்.

இந்த நிகழ்வுகளில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், தற்போதைய மற்றும் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார மற்றும் வட்ட தலைவர்கள் மற்றும் அவர்களது நிர்வாகிகள், பெருநகர சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள், முன்னணி அமைப்புகள், துறை மற்றும் பிரிவு தலைவர்கள் மற்றும் அவர்களது நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்தார்.

Source link