10 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை

அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை : 

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் உள்ளது சின்ன பாலமேடு சுமார் 100 குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித அமாவட்ட செய்திகள் டிப்படை வசதிகளும் செய்து தராமல் உள்ளனர் ஆட்சியாளர்கள்.

முறையான சாலை வசதி இல்லாமல் கரடு, முரடான சாலை வசதி, பொது கழிப்பறை, குளியலறை வசதி இல்லை, கழிவுநீர் கால்வாய் வசதி குடிநீர் முற்றிலும் உப்பு நீரையே குடித்து உயிர் வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அப்பகுதி பொது மக்கள்,

நல்ல குடிநீர் வசதி கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அப்பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி முற்றிலும் சேதமடைந்தும் , சுத்தம் செய்யாமல் தொட்டி அசுத்தமாக காணப்படுவதால் தண்ணீர் சப்ளை அக்கிராமத்தில் முற்றிலும் தடைபட்டது .

முற்றிலும் குடிநீர் வசதி முடங்கியதால் தேர்தல் நேரம் என்பதால் கடந்த 3 மாதத்திற்கு முன் அவசரமாக புதிய குடிநீர் தொட்டி கட்டி திறந்து வைத்துள்ளார் அப்பகுதியை வார்டு கவுன்சிலர் சுரேஷ்

இந்த குடிநீர் தொட்டி கட்டி திறந்த 3 மாதத்திலேயே கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது . என ஒரு வித உயிர் பயத்துடன் குடிநீரை பிடிக்க செல்கின்றனர் பெண்கள் .

எனவே கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளும் அரசியல் கட்சியினர் செய்து தரவில்லை எனவும், தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க மட்டும் வரும்போது அனைத்து வசதிகளும் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்கிறார் அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர்.

Source link