கையில் பணம் இல்லாதபோது அனிருத் தான் உதவி செய்தார்

கையில் பணம் இல்லாதபோது அனிருத் தான் உதவி செய்தார் :

ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை அனிருத் தான் தனது வளர்ச்சிக்கு அனைத்துமாக இருப்பதாக விக்னேஷ் சிவன் உருக்கமாக பேசியுள்ளார். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், நானும் ரவுடி தான் படத்தை எடுக்கும் போது அனிருத்தான் பணம் கொடுத்து உதவியதாக தெரிவித்தார்.

மேலும், அனிருத் முன்பு மண்டியிட்டபடி எடுத்த போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் அவர் ஷேர் செய்துள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் தள்ளிப் போவதாக வெளியான தகவல் : 

ஜூனியர் என்டிஆர்-பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தள்ளிப்போவதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திட்டமிட்டபடி படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ((Mythri Movie Makers)) நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. தயாரிப்பு நிறுவன தரப்பிலிருந்து வெளியாகும் UPDATES மட்டும் தான் உண்மை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி பாய்ஸ் வெப் தொடரின் 5ஆவது மற்றும் கடைசி சீசன் : 

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட The Boys வெப் தொடரின் 5-வது மற்றும் கடைசி சீசன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது…!

வழக்கமாக மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ கதைகளை போல் அல்லாமல், மது, மாது, சூது என வாழும் சூப்பர் ஹீரோக்களால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள் ஒன்றுக் கூடி அவர்களை எதிர்க்கும் புது விதமான கதையம்சம் என்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், கடைசி சீசனின் முதல் இரண்டு எபிசோடுகள் தற்போது வெளியாகியுள்ளன. கடைசி எபிசோட் மே 20-ம் தேதி வெளியாகிறது.

விக்ரம்-ஆனந்த் ஷங்கர் கூட்டணியில் புதிய திரைப்படம்? 

விக்ரம்-ஆனந்த் ஷங்கர் கூட்டணியில் விரைவில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலும் திரைப்படம் உருவாகும் என தெரிகிறது.

முன்னதாக ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

Source link