இன்றைய பஞ்சாங்கம்:
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 26-ம் தேதி வியாழக்கிழமை
நட்சத்திரம்: இன்று காலை 7.17 வரை மூலம் பின்பு பூராடம்
திதி: இன்று மாலை 7.32 வரை சப்தமி பின்பு அஷ்டமி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 10.30 – 11.30, மாலை 12.30 – 1.30
ராகு காலம்: பிற்பகல் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
கௌரி நல்ல நேரம்: மாலை 6.30 – 7.30
சூலம்: தெற்கு
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்
வியாபாரிகளுக்கு விற்பனையை கூட்ட புதிய வழி கிடைக்கும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் மாணவர்கள் பெறுவர். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். பாகப்பிரிவினை சுமுகமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். பழைய வாகனத்தை தந்துவிட்டு புதியதாக வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பணம் டெபாசிட் செய்வர். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நிலையில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மிதுனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
கடகம்
எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுத்து நற்பெயர் வாங்குவர். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். மாணவர்கள் விடுமுறைக்கு வெளியூர் செல்வர். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். படிப்பில் ஆர்வம் பிறக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு பரிசினை பெற்று மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
சிம்மம்
பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்யோகஸ்தர்கள் வேலைப்பளு குறையும். காதல் கண் சிமிட்டும். நல்ல துணை அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகனம் ஓட்டும்போது நிதானமுடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
கன்னி
கூட்டுத் தொழில் லாபம் தரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். கடனில் ஒரு குறிப்பிட்டத் தொகையை கட்டுவீர்கள். கலைஞர்களுக்கான புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும். பழைய வாகனத்தை விற்று விட்டு புதியதாக வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
துலாம்
புதிய தொழில் துவங்குவீர்கள். நண்பர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். வியாபாரத்தில் அதிக விற்பனையாகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். உடல் நலம் சிறப்படையும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
விருச்சிகம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வழக்குகள் தாமதமாகும். மாணவர்கள் நன்கு படிப்பர். சுபச்செலவுகள் அதிகமாகும்.பணப்பற்றாக்குறை தீரும். கோவில் விழாக்களில் மதிக்கப் பெறுவீர்கள். காதல் கசக்கும். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
தனுசு
நீண்ட கால ஆசை நிறைவேறும். வேலையாட்களால் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் அசதி வந்துபோகும். கலைத்துறையினருக்கு பாராட்டு உண்டு. பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். புது நண்பர்கள் கிடைப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: தங்கநிறம்
மகரம்
பிரபலங்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். மகளின் விருப்பம் போல் துணை அமையும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
கும்பம்
சுப நிகழ்ச்சி நடக்கும். பிரிந்தவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வெளியூர் பயணம் வெற்றித் தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். உணவு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். வெளித் தொடர்பால் ஆதாயம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மீனம்
சொத்து சிக்கல்கள் சுமூகமாக முடியும். தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வாகன வசதிப் பெருகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பணப் பிரச்சினை இருக்காது. உத்யோகஸ்தர்கள் மேன்மை அடைவர். புதிய நிறுவனம் துவங்குவர். பிள்ளைகளை கண்காணிப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
