மும்பை,
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு போர் தாக்குதல் காரணமாக கடந்த 25 பங்குச்சந்தை வர்த்தக நாட்களில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நஷ்டத்திலேயே வர்த்தகமாகின.
இதனால் ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ குறியீடுகள் முறையே 6 ஆயிரத்து 670 புள்ளிகள் மற்றும் 2 ஆயிரத்து 55 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி முதலீட்டாளர்களுக்கு ரூ.51 லட் சம் கோடிவரை இழப்பை ஏற்படுத்தியது.
தற்போது 2 வாரங்களுக்கு போர் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேரடியாக இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் ‘சென்செக்ஸ்’ ஒரேநாளில் 2 ஆயிரத்து 946 புள்ளிகள் அதாவது 3.95 சதவீதம் உயர்ந்து 77 ஆயிரத்து 562 புள்ளிகளில் வர்த்தக மாகி நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீடு எண் ‘நிப்டி’ 873 புள்ளிகள் (3.78 சதவீதம்) உயர்ந்து 23 ஆயிரத்து 997 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது. பங்குச் சந்தை உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
