இந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும், அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தும் , தாங்கள் ஆட்சிக்கு வந் தால் எந் தமாதிரியான திட்டங்கள் கொண்டுவரப்படுவது குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில்தவெக தலைவர் விஜய்யும் தன்னுடைய சூறவாளி பிராச்சரத்தை தொடங்கியுள்ளார்.தொடர்ந்து இந்த தேர்தல் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி.ஒரே ஒரு முறை தவெகவுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கூறி விமர்சித்து வருகிறார்.
விஜய் வருகையால் திமுக மற்றும் அதிமுக, நாதக வாக்குகள் அடிப்பட வாய்ப்பு என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.மறுப்புறம் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தீவிரப் பிரச்சாரப் பயணங்களில், கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான விபத்துகள் நிகழ்ந்து வருவது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மேற்க்கொண்ட பிரச்சாரங்களில் ஏற்பட்ட விபத்துகள்:
கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி சேலத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையில் இளைஞர் உயிரிழந்ததது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, சேலத்தில் நடத்த தவெக நிர்வாகிகள் சந்திப்பில் வெயிலின் தாக்கம் காரணமாக சூரஜ் (37) என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அதே போல் தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரைக்கு சென்றுவிஜய் திரும்பிய போது அவரின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற தொண்டர்களில் கல்லூரி மாணவர்கள் விக்னேஷ் மற்றும் அருண் ஆகிய இரு தொண்டர்கள் காயமடைந்தனர். இதில் விக்னேஷ் என்ற மாணவர் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுகாக சென்ற போது விஜய்யின் கார் மீது அவரது தொண்டர்கள் ஏறி செய்த காட்சிகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலுகாக ஏப்ரல் 2 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய தவெக தலைவர் விஜய் சென்ற போது, அவரது வாகனத்தை ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த தம்பதியினர் கீழே விழுந்து காயமடைந்தனர்.மறுப்புறம் ஆதவ் கார் மோதி காவலர் ஒருவரின் கால் முறிந்தது.
விஜய் தேர்தல் பிரச்சாரம் விபத்து
தொடர்ந்து விஜய் பரப்புரை சென்றால், எத்தனை விபத்துகள் ஏற்பட உள்ளதோ என்ற சர்ச்சைகளும் வலம்வர ஆரம்பித்தனர். விஜய் மற்றும் கட்சித் தலைமையினர் பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தபோதிலும், அவரது வாகனத்தை தொடர்ந்து பின்தொடரும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், விஜயின் அறிவுறுத்தல்களை அவருடைய ஆதரவாளர்களே பின்பற்றவில்லை என்ற விமர்சனங்கள் எழுகின்றன.
குறிப்பாக இன்று ஒரே நாளில் ஐந்து இடங்களில் விபத்துகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தார்.
அப்போது விமான நிலையத்தில் இருந்து பிரச்சார வாகனத்தின் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது 5 இடங்களில் விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த சம்பவங்களில் மொத்தம் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் முக்கியமான விஷயம் என்வென்றால், விஜய்யை பின் தொடரும் ரசிகர்கள் யாரும் தலைகவசம் அணிந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
