வாக்காளர்களை வரவேற்ற நிலா!
இந்த சூழலில்தான் புதுச்சேரியில் அமைந்திருக்கக் கூடிய வி.ஓ.சி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய வாக்குச்சாவடியில் நிலா என்ற பெயர் கொண்ட ரோபோட் வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. நிலா ரோபோ பாரம்பரிய உடையான தாவணியை அணிந்து கையில் பூத்தட்டை ஏந்தியபடி வாக்காளர்களுக்கு பூக்கொடுத்து வரவேற்றது அனைவருக்கும் உற்சாகத்தை தந்தது.
புதுச்சேரி தேர்தல் ஆணையத்தின் இந்த முன்னெடுப்பை பல வாக்காளர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த முன்னெடுப்பு அதிகளவிலான வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு வர வைக்கும் முயற்சி என்பதால் இது மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.
வாக்குச் சாவடிகளில் புதுச்சேரி தேர்தல் ஆணையம் பாதுகாப்பு நடைமுறைகளை பலப்படுத்தி இருக்கிறது மேலும் டிரோன் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணித்து வருகிறது.
புதுச்சேரி தேர்தல் களம்
புதுச்சேரியில் மொத்தம்9.5 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர். மொத்தம் 294 வேட்பாளர்கள் 30 தொகுதிகளில் களம் காண்கின்றனர். இந்த 294 வேட்பாளர்களின் எதிர்காலத்தின் தீர்மானிக்க போகிற இந்த தேர்தல் களம் பல மாதங்களுக்கு முன்பே சூடு பிடித்து விட்டது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியிலான கட்சியே ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இவர்களை எதிர்த்து திமுக காங்கிரஸ் கூட்டணி களம் காண்கிறது.
புதுச்சேரியின் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் அதிமுக மற்றும் லட்சியவாத ஜனநாயக கட்சியும் இணைந்து இருக்கிறது. இது புதுச்சேரியின் இண்டி கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.
