நேபாளம் அணிக்கு எதிராக திரில் வெற்றி: இங்கிலாந்து கேப்டன் கூறியது என்ன?

மும்பை,

டி20 உலகக்கோப்பையில் நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் கூறுகையில்;

‘இது எளிதானதாக இருக்கவில்லை. நல்லவேளையாக வெற்றி பெற்றோம். அவர்கள் மிகச்சிறப்பாக விளையாடினர். குறிப்பாக எங்களது சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித்துக்கு (3 ஓவரில் 42 ரன் விட்டுக்கொடுத்தார்) எதிராக இவர்கள் ரன் திரட்டியது போல் பெரும்பாலான அணிகள் விளையாடியதில்லை. ஆட்டம் இவ்வளவு நெருக்கமாக செல்லும் என்று நினைக்கவில்லை.

எஞ்சிய ஆட்டங்கள் நேபாள அணியினருக்கு நன்றாக அமைய எனது வாழ்த்துகள். ஜேக்கப் பெத்தேலின் பேட்டிங் பிரமாதம். அவர் சுழற்பந்து வீச்சை அடித்து ஆடிய விதம் அருமையாக இருந்தது’ என்றார்.

கடந்த உலகக் கோப்பையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1 ரன் வித் தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்ட நேபாளம், இப்போது இங்கிலாந் துக்கு எதிராகவும் நெருங்கி வந்து தோற்று இருக்கிறது.

Source link