Breaking : மீண்டும் சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,600 குறைவு..! வெள்ளி ரூ.5,000 சரிவு..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,000-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,12,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.2.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2.60 லட்சத்திற்கு விற்பனையாகிறது.. தங்கம், வெள்ளி விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : PF பயனர்களுக்கு குட்நியூஸ்.. நேரடியாக உங்கள் கணக்கிற்கே பணம் வரும்.. மத்திய அரசின் முக்கிய முடிவு..!

Source link