டெல்லிக்கு எதிரான திரில் வெற்றிக்கு இதுதான் காரணம்…கில் விளக்கம்

புதுடெல்லி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிகப்பட்டு மோதுகின்றன.

இந்த தொடரில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் குஜராத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். குஜராத் அணியில் கில், பட்லர் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

கில் 70 ரன்களும், பட்லர் 52 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய வாஷிங்க்டன் சுந்தர் நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பற்கு குஜராத் 210 ரன்கள் எடுத்தது.

பின்னர் 211 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு பதும் நிசாங்காவும், லோகேஷ் ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் திரட்டி சூப்பர் தொடக்கம் தந்தனர். நிசாங்கா 41 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த நிதிஷ் ராணா (5 ரன்), சமீர் ரிஸ்வி (0), கேப்டன் அக்ஷர் பட்டேல் (2 ரன்) ஆகியோர் ரஷித்கானின் சுழல் ஜாலத்தால் வீழ்த்தப்பட்ட னர்.

இதற்கு மத்தியில் லோகேஷ் ராகுல் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலை கொண்டு போராடினார். அவர் 92 ரன்களில் (52 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) முகமது சிராஜின் பந்தில் வீழ்ந்தார். இதன் பின்னர் விரலில் ஏற் பட்ட காயத்தால் பாதியில் வெளிேயறிய டேவிட் மில்லர் மீண்டும் களம் கண்டார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 36 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் மில்லர்- விப்ராஜ் ‘ நிகம் கூட்டணி 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 23 ரன்கள் எடுத்தது. இதையடுத்து கடைசி ஓவரில் 13 ரன் தேவையாக இருந்தது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் 3 பந்தில் 5 ரன் வழங்கி விப்ராஜ் நிகமின் (12 ரன்) விக்கெட்டை சாய்த் தார். 4-வது பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர் அதை சிக்சருக்கு தூக் கினார். 5-வது பந்தில் ரன் இல்லை. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட் டது. இறுதி பந்தை டேவிட் மில்லரால் (41 ரன், நாட்-அவுட்) அடிக்க முடி யவில்லை. இருந்தாலும் ஒரு ரன்னுக்கு ஓடிய போது எதிர்முனையில் நின்ற குல்தீப் யாதவ் (1 ரன்) ரன்-அவுட் செய்யப்பட்டார்.

டெல்லி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 209 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற் றியை பெற்றது. இந்த சீசனில் குஜராத்தின் முதல் வெற்றியாகும். டெல்லிக்கு முதல் தோல்வியாகும்.

இந்த நிலையில் வெற்றி தொடர்பாக பேசிய குஜராத் கேப்டன் கில் கூறியதாவது,

நாங்கள் விளையாடிய மூன்று ஆட்டங்களுமே கடைசி ஓவர் வரை சென்றன. ஆனால் இதில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. எங்களுக்கு வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. கடைசி பந்து, நாங்கள் யார்க்கர் வீசுவதா அல்லது மெதுவான பந்து வீசுவதா என்றுதான் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஆனால், விக்கெட்டின் தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும்போது, ​​மெதுவான பந்தை பவுண்டரிக்கு அடிப்பது கடினமாக இருக்கும் என்று முடிவு செய்தோம். 210 ரன்கள் எடுத்ததில் மகிழ்ச்சி. இந்த விக்கெட்டில் நாங்கள் சராசரி ரன்களை விட 10-15 ரன்கள் அதிகமாக எடுத்திருக்கிறோம். நாங்கள் கடைசி ஓவர்களில் பேட்டிங் செய்தபோது கூட, பெரிய பவுண்டரிகளை அடிப்பது எளிதாக இருக்கவில்லை; விக்கெட்டின் மெதுவான தன்மையால்கடினமாக இருந்தது. நாங்கள் நன்றாகப் பந்துவீசினால், இதில் வெற்றி பெற முடியும் என்று நினைத்தோம். என தெரிவித்தார்.

Source link