பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் என்.ஆர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் வாக்களித்தார் முதலமைச்சர் ரங்கசாமி. வாக்குச்சாவடிக்கு வழக்கம் போல் YAMAHA RX 100 பைக்கில் வந்து தமது வாக்கை செலுத்தினார்.

புதுச்சேரியில் தேர்தல் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் இன்று ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி, சுமாராக 17.41% வாக்குகள் பதிவானது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

புதுச்சேரிக்கு வாக்குறுதிகள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன் வைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்து உள்ளது.

வாக்களித்த முதல்வர் ரங்கசாமிபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இந்திராநகர் லாஸ்பேட்டை பிள்ளையார் கோயில் வீதியில் வசிக்கிறார். லாஸ்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் ரங்கசாமி வந்தார்.

மாரியம்மன் கோயிலில் வழிபாடு வாக்கு அளித்த பின்னர், நவசக்தி மாரியம்மன் கோயிலில் ரங்கசாமி வழிபாடு செய்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி கூறியதாவது; வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தலுக்கு முதல் நாள் சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அதேபோல் இம்முறையும் சாமி கும்பிட்டு வந்துதான் வாக்களித்து உள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார்.

Source link