“முதல்வரை பற்றி தவறாக பேசவில்லை.. நான் சொன்னது இதுதான்..” சர்ச்சையான நிலையில் இபிஎஸ் விளக்கம்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சி தலைவர்கள் குறித்து நாகரிகமற்ற முறையில் பேசி வருகின்றனர். அந்த வகையில் நேற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசியது சர்ச்சையானது. அப்போது “ திமுக காலத்தில் வெள்ளம் வந்ததா? வறட்சி வந்ததா? புயல் வந்ததா? கொரோனா வந்ததா? ஒன்றும் வரவில்லை.. அப்படி வந்திருந்தால் இந்த முதலமைச்சரே கொரோனாவில் காணாமல் போயிருப்பார்.. இவரே அந்த கொரோனாவிலேயே போயிருப்பார்..” என்று கூறினார்..

முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனாவில் போயிருப்பாரு என்று இபிஎஸ் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் பேச்சுக்கு திமுக தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

இந்த நிலையில் நிலையில் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தது குறித்து இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.. துணை முதலமைச்சர் தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர் “ சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.. நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான ரகசியத்தை வெளியிடுவதாக சொன்ன உதயநிதி இன்னும் அதனை வெளியிடவில்லை.. நீட் விலக்கு ரகசியத்தை வெளியே சொன்னா; “ ராஜா காது கழுதை கதை’ போல் ஆகிவிடுவோம் என்று உதயநிதி பயப்படுகிறார்..

நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் – திமுக தான். தற்போது அதே திமுக – காங்கிரஸ் தான் நீட் தேர்வை எதிர்க்கின்றன.. ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வை கொண்டு வர முடியவில்லை.. அதன்பின்னர் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.. அதனால் நீட் கொண்டு வரப்பட்டது.. நீட் விவகாரத்தில் தவறு செய்தது காங்கிரஸும் திமுகவும் தான்.. ஆனால் நம் பழி போடுகின்றனர்.. இதை எப்படி ஏற்பது..?

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்லி உண்மையாக்க பார்க்கின்றனர்.. ஆனால் அதிமுக அப்படி அல்ல, எந்த வாக்குறுதி கொடுத்தாலும், அதை செவ்வனே நிறைவேற்றும் கட்சி..

இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. பெண்கள், குழந்தைகள் நடமாட முடியவில்லை.. பாட்டிமாவுக்கு கூட பாதுகாப்பு இல்லாத ஆட்சி தேவையா..?” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து  முதல்வரை விமர்சனம் செய்தது குறித்து இபிஎஸ் விளக்கம் அளித்தார்.. அப்போது “ கொரோனா காலத்தில் ஸ்டாலின் எங்கே காணாமல் போனார் என்று தான் சொன்னேன்.. கொரோனா காலத்தில் மக்களுக்கு ஆலோசனை வழங்காமல் முதல்வர் காணாமல் போனார் என்று தான் கூறினேன்.. உடனே என்னை பற்றி தவறாக பேசுகிறார் என்று ஸ்டாலின் புலம்புகிறார்.. காணாமல் போனார் என்று தான் சொன்னேனே தவிர, ஸ்டாலினை பற்றி தவறாக பேசவில்லை.. பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.. ஆனால் நீங்களும் உதயநிதி ஸ்டாலினும் என்னவெல்லம் என்னைப்பற்றி பேசினீர்கள்..” என்று தெரிவித்தார்..

Read More : “தேர்தலுக்காக இவ்வளவு கீழ்தரமாவா பேசுவீங்க..” எடப்பாடி பழனிசாமியை விளாசிய கனிமொழி..!

Source link