'எல்ஐகே' படத்தில் சீமானுடனான அனுபவத்தை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் கதாநாயகனாக உருவெடுத்து வரும், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள “எல்.ஐ.கே.’ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. விக்னேஷ் சிவன் இயக்கிய இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, மிஷ்கின், மாளவிகா உள்பட பலரும் நடித்துள்ளனர். சென்னையில் நடந்த பட விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது பல விஷயங்களை பகிர்ந்தார்.

அவர் கூறும்போது, “எதிர் காலம் என்று நான் எப்போதுமே சிந்தித்தது கிடையாது. எந்த திட்டமிடலும் என் வாழ்க்கையிலும் இல்லை. மனதில் பட்டதை செய்துகொண்டு போய்க் கொண்டிருப்பவன் நான். எனவே எனக்கென இலக்கு இல்லை. எனக்கு எப்போதெல்லாம் துயரங்களும்,கஷ்டங்களும் வரிசைகட்டி நிற்கின்றதோ, அப்போது யோசிக்காமல் தூங்கிவிடுவேன். கவலைகளுக்கு அதுதான் நல்ல மருந்து என்று நினைக்கிறேன்.”, என்றார்.

மேலும், இந்த படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்துள்ள சீமான் குறித்தும் பேசினார். அதாவது,“சீமான் அண்ணனுக்கு அறிவு மிகவும் அதிகம். ஆனால், அந்த அறிவை வைத்து அவர் ஒருபோதும் பெருமை பேச மாட்டார். அவருக்கு தெரிந்த பல விஷயங்கள் எனக்கு தெரியாது. ஆனாலும் அவற்றை குறித்து என்னிடம் தேவையில்லாமல் பேச மாட்டார், அரசியல்வாதிகள் யாராவது சந்தித்தால் அவர்களிடம் சினிமா பற்றி பேச மாட்டார். யார் யாரிடம் என்ன பேச வேண்டும் என்பதில் அவருக்கு ஒரு தெளிவு இருக்கிறது. அது ஒரு மிகப் பெரிய குவாலிட்டி. அதை நானும் என் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று எல்ஐகே படத்தில் சீமானுடனான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Source link