இந்த நிலையில்தான் தலைமைச்செயலாளர் முருகானந்தத்தை மாற்றி அவருக்கு பதிலாக புதிய தலைமைச்செயலாளர் சாய் குமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ரமனை காத்திருப்போர் பட்டியலில் மாற்றி விட்டு புதிய டிஜிபியாக சந்திப்பாய் ரத்து வரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் தான் அரசு ஊழியர்களிடம் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதால் மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களை இடம் மாற்றம் செய்ய உத்தரவிடக் கூடிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
கடந்த 1994 ஆம் ஆண்டு அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆணையின் அடிப்படையில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றும் அரசு ஊழியர்களை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணப்பாறை தாலுக்கா மானாவாரி மற்றும் இரவை பாசன விவசாயிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இதில் அரசு நிர்வாகத்தின் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், அதிகார துஷ்பிரயோகத்தை தவிர்க்கவும் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வது அவசியம் என அவர்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
வேளாண் துறை, வருவாய் மற்றும் காவல் துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றி வருவதன் காரணமாக, அரசு நலத் திட்டங்களை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் வழங்கி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
தேர்தல் சமயத்தில் அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும், ஆனால் தொடர்ச்சியாக ஒரே ஒடத்தில் பணியாற்ற அனுமதிப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்று அந்த அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட வாய்ப்பிருப்பதாகவும் மனுவில் தெரிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, இடமாற்றம் என்பது பணி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது என தெரிவித்தது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதால், எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை சட்டப்படி பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
தலைமை செயலர் மாற்றத்திற்கு முதல்வர் கண்டனம்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக தலைமைச்செயலரை மாற்றியதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்ய களத்திற்கு வர முடியாத தேர்தல் ஆணையம் மறைமுகமாக முழுமூச்சுடன் பாஜகவிற்காக வேலை செய்து கொண்டிருக்கிறது எனவும் தமிழக தலைமை செயலாளரை மாற்றி ஒருதலை பட்சமாக அத்துமீறிய செயலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.
