இதுவரை புதுச்சேரியில் 37 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் தவெக தலைவர் விஜய் சோஷியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவின் மூலம் புதுச்சேரி மக்களுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றார் விஜய்.
புதுச்சேரி தேர்தல்
அவர் பதிவிட்டவாறு, புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் இத்தேர்தலில் சில மணி நேரங்களே உள்ளன. எனவே வாக்குப்பதிவு நிறைவு பெரும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார் தவெக தலைவர் விஜய். இவரின் இந்த பதிவின் கீழ் விஜய்யின் ஆதரவாளர்கள் பலர், வாக்கை விசில் சின்னத்திற்கு செலுத்திவிட்டோம் அண்ணா என பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் புதுச்சேரியில் இதுவரை கடந்தமுறையை விட இம்முறை அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாம். இதற்கு இம்முறை புதிதாக வாக்கு செலுத்தும் இளைஞர்கள் முக்கியமான காரணம் என சொல்லப்படுகின்றது. அதுவும் புதிதாக வாக்களிக்கும் இளைஞர்கள் பலர் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாகவும், அவர்கள் ஆர்வமாக தங்களின் வாக்குகளை காலையிலேயே செலுத்திவிட்டதாகவும் தகவல் வருகின்றன.அதன் காரணமாக கூட கடந்தமுறையை விட இம்முறை புதுச்சேரியில் காளையை நிலவரப்படி அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனாலும் இது எந்தளவிற்கு உறுதியான உண்மையான தகவலாக இருக்கும் என்பதும் தெரியவில்லை. இருப்பினும் விஜய்யின் பதிவின் கீழ் ஏராளமான இளைஞர்கள் வாக்கு செலுத்தியதை உறுதிப்படுத்தி வருகின்றனர். வாக்கு செலுத்திவிட்டு புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டு வருகின்றனர் இளைஞர்கள்.
விஜய் ட்விட்டர் பதிவு
இதன் மூலம் புதிதாக வாக்களிக்கும் இளைஞர்களின் பெரும்பாலான ஆதரவு விஜய்க்கு இருப்பதாக ஒருபக்கம் பேச்சுக்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் தவெகவினர் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை அதிகப்படியாக பெறவே முயற்சித்து வந்ததாக சொல்லப்படுகின்றது. அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளிலும் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகப்படியான திட்டங்களை செய்ய இருப்பதாக கூறியிருந்தனர்.
மேலும் விஜய்யின் ரசிகர்களான இளைஞர்கள் பட்டாளத்தினர் அவரின் ஆதரவாளர்களாக மாறியிருக்கின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் புதிதாக வாக்களிப்போர் மட்டுமல்லாமல் இளைஞர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாக கணிக்கப்படுகின்றது. எனவே புதுச்சேரி தேர்தலிலும் விஜய்யின் தவெக கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது.
விஜய்க்கு கோரிக்கை
வெற்றிபெறுவார்களா ? என்பதனை அடித்து சொல்லமுடியாது என்றாலும் கண்டிப்பாக குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெறுவார்கள் என பலரால் கணிக்கப்படுகின்றது. இந்நிலையில் விஜய் புதுச்சேரி வாககர்களுக்கு ட்விட்டர் பதிவு மூலம் கவனமாக வாக்களியுங்கள் என பதிவிட்டு கோரிக்கை வைத்திருக்கின்றார். ஆனால் இதே பதிவை விஜய் ஒரு வீடியோவாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது தான் அவரது ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
https://x.com/TVKVijayHQ/status/2042135131612442746
