எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு
அவருடைய இந்த பேச்சு பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலுக்காக இந்தளவுக்கு தரம் தாழ்ந்து பேச துவங்கி விட்டார் இபிஎஸ் என திமுகவினர் தொடர்ந்து இணையத்தில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதோடு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கன்மொழி, இபிஎஸ் தரம் தாழ்ந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
கனிமொழி பதிலடி
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக மற்றும் கூட்டணி கடசி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கனிமொழி, தற்போது நாமக்கலில் திமுக வேட்பாளர் ராணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசியவர், மக்களுக்கான ஆட்சி என்று சொல்லி நாம் வாக்கு கேட்கிறோம். ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் தோல்வி பயத்தால் எதை எதையோ பேசி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து பேசக்கூடிய நிலைக்கு வந்து விட்டார். அவருக்கு தோல்வி பயம் மட்டுமல்ல தோல்வி ஜுரம் அவருக்கு வந்து விட்டது.
இதனால் தான் முதல்வரை கீழ்த்தரமாக விமர்சிக்க கூடிய ஒருவராக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என விளாசியுள்ளார் கனிமொழி. அதோடு, தொடர்ந்து கொச்சையாக பேசி வரும் இபிஎஸ், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து வரக்கூடியவர். போன தேர்தலில் பாஜகவுடன் எந்த ஒட்டும், உறவும் இல்லை என்றார். இன்னைக்கு அமித்ஷாவே சொல்லி விட்டார் என்கிறார். இந்த தேர்தலில் மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடத்தை சொல்லி தருவார்கள் என வெளுத்து வாங்கியுள்ளார் கனிமொழி.
இபிஎஸ் அளித்துள்ள விளக்கம்
இந்த பரப்புகளுக்கு மத்தியில் திருவல்லிக்கேணியில் பேசிய எடப்பாடி பழனிசாமி தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். அதாவது கொரோனா காலக்கட்டத்தில் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு சரியான ஆலோசனை கொடுக்கலை. அப்போ அவர் எங்க காணாமல் போய்ட்டாருன்னு தான் சொன்னேன். அவரைப்பற்றி தவறாக என்றைக்கும் நான் பேசியது கிடையாது. காணாமல் போனார் என்றுதான் சொன்னேன் என விளக்கம் அளித்துள்ளார்.
ஆர்.எஸ். பாரதி கண்டனம்
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி நேற்று பேசியதையும், இன்றைய பேச்சையும் ஒப்பிட்டு இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் திமுக ஆதரவாளர்கள். நேற்று பேசியதை இன்றைக்கு அப்படியே நான் பேசவில்லை என்கிறார் இபிஎஸ் என விமர்சித்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் கொலைவெறி போகவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றிய பேச்சுக்கு கடும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
இதனிடையில் உதயநிதி ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறி விமர்சனம் செய்து வருவது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த வகையில் பொன்னேரியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், என்னை பயங்கரமா திட்டுறார். எனக்கு என்ன அனுபவம்ன்னு கேட்கிறார். அவரை மாதிரி யார் காலிலும் விழுந்து பதவி வாங்குன அனுபவம் இல்லை. இபிஎஸ் இன்னும் கொஞ்ச நாள்ல கெட்ட வார்த்தைல பேச ஆரம்பிச்சுருவார் நினைக்கிறார். இப்போ என்னை விட்டுட்டு முதல்வரை பிடிச்சுக்கிட்டார். தோல்வி பயத்தில் பதட்டத்தில் பேசி கொண்டிருக்கிறார்
