கொரோனா மட்டும் இருந்திருந்தால் முதலமைச்சர் முக ஸ்டாலின் காணாமல் போயிருப்பார், கொரோனாவிலேயே போயிருப்பார் என பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. இதில் முதலமைச்சர் கொரோனாவிலேயே போயிருப்பார் என எடப்பாடி பழனிச்சாமி பேசியது தான் சர்ச்சையானது. இதற்கு பலதரப்பட்ட கண்டனங்கள் வந்தன. முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சிற்கு பதிலளித்தார்.
அவரது நேற்றைய பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சு குறித்து எமோஷனலாக பேசி அவருக்கு பதிலடி கொடுத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சிற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை மறுத்து பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
இதுகுறித்து அவர் பேசியது, நேற்று கொளத்தூரில் நடந்த கூட்டத்தில் தான் முதலமைச்சர் முக ஸ்டாலின் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை. கொரோனா காலகட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த காலகட்டத்தில் ஸ்டாலின் மக்களுக்கு சரியான ஆலோசனை வழங்கவில்லை. இப்போ ஓடோடி போட்டோஷூட் எடுக்கும் ஸ்டாலின் கொரோனா காலகட்டத்தில் எங்கு காணாமல் போயிருந்தார் என கேட்டேன்.
அதற்கு ஸ்டாலின், என்னைப்பற்றி தவறாக பேசுகின்றார் என புலம்பிக்கொண்டு இருக்கின்றார். நான் காணாமல் போய்விட்டார் என்று தான் சொன்னேனே தவிர வேறு எதுவும் தவறாக பேசவில்லை. ஆனால் நீங்களும் உதயநிதி ஸ்டாலினும் எப்படியெல்லாம் பேசுகின்றார்கள். ஆனால் நான் தவறாக பேசவில்லை, அதற்கான அவசியமும் இல்லை என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
மக்கள் கருத்து
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் நேற்றைய பேச்சையும் இன்றைய பேச்சையும் பலர் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய கூட்டத்தில், ஸ்டாலின் ஆட்சியில் கொரோனா வந்திருந்தாள் காணாமல் போயிருப்பார், இவரும் அந்த கொரோனாவிலேயே போயிருப்பார் என பேசியிருக்கிறார். ஆனால் இன்றைய கூட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் ஸ்டாலின் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.
கொரோனா காலகட்டத்தில் ஸ்டாலின் காணாமல் போய்விட்டார் என கூறியிருக்கின்றார். இவரின் இந்த பேச்சில் முரண் இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். நேற்றைய கூட்டத்தில் திமுக ஆட்சியில் கொரோனா இல்லை என கூறியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் இன்றைய கூட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் ஸ்டாலின் காணாமல் போய்விட்டார் என பேசியிருக்கிறார். எனவே இந்த பேச்சில் முரண் இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.
மேலும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து திமுகஆட்சியமைத்த பிறகு தான் கொரோனா இரண்டாம் அலை வீச துவங்கியது. முதல் அலையை விட கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக இருந்தது. லட்சக்கணக்கில் பாதிப்புகள் இருந்தது. அந்த காலகட்டங்களில் மருத்துவமனையில் கொரோனா வார்டுகள் முதலமைச்சர் ஸ்டாலின் சென்று பாதிக்கப்பட்டோரை பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
அந்த வீடியோவை எல்லாம் எடுத்துப்போட்டு தற்போது திமுக ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் திமுக ஆட்சியில் தான் கொரோனா மிக தீவிரமாக இருந்தது என திமுக ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் தந்து வருகின்றனர். அதைப்போல எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சிலும் முரண் இருப்பதாக கூறி வருகின்றனர். எனவே பெரும்பாலானோர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பேசியது தவறு என்பது போல தான் சொல்கின்றனர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என பதிலளிக்கிறார். ஒட்டுமொத்தத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை சர்ச்சையை ஏற்படுத்தி தான் வருகின்றது. இதற்கு முன்பு துணைமுதல்வர்உதயநிதி ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியதும் சர்ச்சையானது. அதற்கு உதயநிதி ஸ்டாலினும் பதிலளித்து பேசிக்கொண்டு வருகின்றார். இவ்வாறு திமுக மற்றும் அதிமுக பரப்புரை பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
