நிவின் பாலியின் “பேபி கேர்ள்” திரைப்படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது?

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் ‘பேபி கேர்ள்’. மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். பாபி மற்றும் சஞ்சய் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

இப்படத்தில் நடிகை லிஜோ மோல் நாயகியாக நடித்துள்ளார். சங்கீத் பிரதாப், அபிமன்யு திலகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை முக்கிய வேடத்தில் நடித்திருப்பது இப்படத்தின் முக்கிய அம்சமாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், ‘பேபி கேர்ள்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 12-ந்தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Source link