தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்!

சென்னை,

தமிழ்நாடு இந்தியாவின் காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியின் தலைமையிடமாகத் திகழ்கிறது. இந்தியாவின் மொத்த தோல் ஏற்றுமதியில் 47 சதவீதமும், காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் 38 சதவீதமும் தமிழ்நாடு மட்டுமே பங்களிப்பது உண்மையிலேயே ஒரு பெருமைக்குரிய சாதனையாகும்

இந்தத் துறையில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பணிபுரிந்து வருவது, அவர்களுடைய குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு இத்தொழில் ஒரு வலுவான தூணாக விளங்குகிறது என்பதைக் காட்டுகிறது.

தோல் பொருள்கள் ஏற்றுமதி மூலம் 1.25 பில்லியன் டாலர் மதிப்புள்ள வருவாயை ஈட்டுவதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, குறிப்பிடத்தக்க மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது. உலகளாவிய பிராண்டுகள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்த்து, குறிப்பாக பெண்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான கொள்கைகளை வகுத்துச் செயல்படுவது, உள்ளடக்கிய மற்றும் நிலைத்தன்மையுள்ள வளர்ச்சியைத் தமிழ்நாடு உறுதிப்படுத்தியுள்ளது என்பதை உணர்த்துகிறது.

Source link