திமுக ஆட்சியில் மட்டும் கொரோனா வந்திருந்தால் முக ஸ்டாலின் காணாமல் போயிருப்பார், அந்த கொரோனாவிலேயே போயிருப்பார் என பேசிவிட்டார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. திமுகவின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தனர். இதுகுறித்து திமுகவை சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து வருகின்றனர்
வீரபாண்டியன் கண்டனம்
முதலமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து பேசுவதாக கூறினார்.இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில் CPI கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனும் எடப்பாடியை கண்டித்து பேசியிருக்கிறார். அவர் பேசியது, கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தான் காரணம். இது தெரியாமல் தவெக தலைவர் விஜய் பேசிக்கொண்டு இருக்கின்றார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இது தெரியாமல் திமுகவை வசைபாடி வருகின்றார்.
தற்போது எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக இல்லை. அவர் எதிர்க்கட்சி தலைவர் போல பேசுவதில்லை. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் போல பேசுவதில்லை. தமிழகத்தின் சித்ரகுப்தனாக மாறி பேசிக்கொண்டு இருக்கின்றார். இது குடித்து சாகவேண்டும், இவர் மேலே போகவேண்டும் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கின்றார். இதெல்லாம் சுத்தமாக சரியில்லை.
எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து நாம் அரசியலை எதிர்பார்க்கின்றோம். அவரிடம் அரசியல் வறட்சி உள்ளது. இது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல, முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அரசியல் சார்ந்து தான் பேசிக்கொண்டு வருகின்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படி பேசுவதில்லை என கூறி அவரை விமர்சித்து இருக்கின்றார் வீரபாண்டியன். இதுபோல் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.
தவறாக பேசவில்லை என்ற இபிஎஸ்
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய பரப்புரையில் நான் அப்படியெல்லாம் பேசவில்லை. முக ஸ்டாலின் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை என கூறுகின்றார். கொரோனா காலகட்டங்களில் மக்களுக்கு ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை, காணாமல்போய்விட்டார் என்று தான் சொன்னதாக எடப்பாடி பழனிச்சாமி பேசுகின்றார். ஆனால் அவர் நேற்று பேசும்போது, திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால் ஸ்டாலின் காணாமல் போயிருப்பார், கொரோனாவிலேயே போயிருப்பார் என கூறியிருக்கின்றார்.
எனவே எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய பேச்சுக்கும் நேற்றைய பேச்சுக்கும் இடையே முரண் இருப்பதாக பலர் கூறுகின்றனர். என்னதான் அவர் வாய் தவறி பேசியிருந்தாலும் கூட இப்படியெல்லாம் பொதுமேடையில் பேசியிருக்க வேண்டாம் என்பது தான் அனைவரது கருத்தாகவும் இருக்கின்றது. இது அதிமுகவிற்கு கடும் பின்னடைவையாக கூட அமையலாம் என சொல்லப்படுகின்றது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய பரப்புரையில் முக ஸ்டாலின் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.
நான் ஒன்றும் தவறாக பேசவில்லை, அதற்கான அவசியமும் இல்லை என்று தான் கூறியிருக்கின்றார். ஆனால் அவர் நேற்று பேசும் வீடியோவை சோஷியல் மீடியாவில் திமுக ஆதரவாளர்கள் போட்டு காட்டி அவர் பேசுவதில் முரண் இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் கடுமையாக பேசி வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி.
இதனால் அவரது பரப்புரை பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. அதற்கான கண்டனங்களும் வந்துகொண்டு தான் இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக திமுகவினரும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு எதிர்க்கட்சித்தலைவர் இப்படி தரம் தாழ்ந்து பேசக்கூடாது என்றே கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ நான் தவறாக எதுவும் பேசவில்லை என்கின்றார். இப்படியான நிலையில் இவர்களின் பரப்புரை சென்றுகொண்டு இருக்கின்றது.
