சென்னை,
234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது.
தி.மு.க.. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மனு தாக்கல் செய்தனர்.நேற்று முன் தினம் மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம், இன்று பிற்பகலுடன் நிறைவடைந்தது. இறுதி வேட்பளர் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் வி.பி.துரை, அதிமுகவில் இருந்து இசக்கி சுப்பையா, நாம் தமிழர் கட்சியின் நத்தம் சிவசங்கரன், தவெகவை சேர்ந்த ராஜகோபால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இசை கண்ணன் ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர்.
