தவெக வேட்பாளர் மீது மனைவி பரபரப்பு புகார்.. குழந்தையை மீட்டுத்தர கோரிக்கை..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதன்முறையாக தேர்தலில் களமிறங்குகிறார்.. அவரின் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.. தவெகவின் பொருளாளராக வெங்கட் ரமணன் என்பவர் இருக்கிறார்.. அவர் தற்போது சென்னை மயிலாப்பூர் தொகுதியில் களமிறங்குகிறார்..

இந்த நிலையில் வெங்கட்ரமணின் மனைவி மீனாட்சி இன்று தனது தாயாருடன் வந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது கணவர் குழந்தையை பார்க்க விடாமல் தடுப்பதாகவும், மீறி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்..

மேலும் “ என்னை கணவர் என்னை அடித்து துரத்தி விட்டார்.. என்னை கூப்பிடுகிறேன் என்று சொல்லி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.. எனக்கு பெண் குழந்தை உள்ளது.. அந்த குழந்தையும் காட்ட மறுக்கிறார்.. குழந்தை என்ன நிலைமையில் இருக்கிறது என்பது கூட எனக்கு தெரியாது.. என்னை 6 வருடமாக கொடுமைப்படுத்தி வருகிறார்..

குழந்தை எல்லாம் காட்ட முடியாது, உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று மிரட்டுகிறார்.. வீட்டுக்கு வந்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்.. அதனால் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்.. என் குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என்றும், கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்..” என்று தெரிவித்தார்..

மீனாட்சி தனது புகாரில் “ கடந்த 2021-ம் ஆண்டு வெங்கட்ரமணனுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தோம்.. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.. ஆனால் வெங்கட்ரமணன் என்னுடன் சேர்ந்து வாழாமல், குழந்தையை மட்டும் பிரித்து சென்றுவிட்டார்.. எனவே குழந்தையை மீட்டு தரவேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

“விஜய் ஆதரவுடன் இபிஎஸ் முதல்வராக நினைத்தார்.. 5000 கோடி சம்பாதிக்க பிளான் போட்டார்..” செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு..!

Source link