டி20 உலகக் கோப்பை – இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகள்?

சென்னை,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துகின்றன. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ, பி, சி, டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்று, அடுத்து நமீபியா அணிக்கு எதிராக விளையாட உள்ளனர். அதனையடுத்து வரும் 15-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read
இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் சம்மதம் ?
டி20 உலகக் கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகள்?

ஆனால் இந்த போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் நிலவி வருகிறது. காரணம் இந்தியாவிற்கு எதிராக டி20 உலக கோப்பையில் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஐசிசி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கைகளை விடுத்தது. ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தற்போது சமரசம் எட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகளை பாகிஸ்தான் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கூடுதல் வருவாய் தர வேண்டும் என்று்ம் இந்தியா – பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடரை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உலக கோப்பை போட்டியின்போது இந்தியா – பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே கை கொடுப்பது கண்டிப்பாக நடக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே இந்தியா உடனான போட்டியில் விளையாடுவது குறித்து பரிசீலிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Source link