மின்காந்த ஆயுத அமைப்பைச் சோதித்த வடகொரியா

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கான குழுவிற்கு வான்ஸ் தலைமை :

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான குழுவிற்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமை தாங்குவர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் வரும் 11ம் தேதி நடைபெறும் உயர்மட்டப் பேச்சுவார்த்தையில், மூத்த ஆலோசகர்களான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் வான்ஸ் உடன் பங்கேற்கின்றனர்.

ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரவும், பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிப்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும். உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்கு இடமில்லாமல் ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பதே வாஷிங்டனின் முதன்மையான முன்னுரிமை என்பதையும் வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தி உள்ளது.

மின்காந்த ஆயுத அமைப்பைச் சோதித்த வடகொரியா :

வடகொரியா, மின்காந்த ஆயுத அமைப்பைச் சோதித்ததாக தெரிவித்ததுள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சோதிக்க வட கொரியாவிற்குத் ஐ.நா. தடை விதித்துள்ள நிலையில், கடந்த 3 நாட்களாக ஜெனரல் கிம் ஜாங் சிக் (( Kim Jong Sik))மேற்பார்வையில் மின்காந்த ஆயுத அமைப்பு மற்றும் கொத்து வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களை சோதித்ததாக அந்நாட்டு அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்னணு உள்கட்டமைப்புகளைச் சீர்குலைக்க வெடிபொருட்களுக்குப் பதிலாக இந்த மின்காந்த ஆற்றலைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இடைக்கால அதிபர் டெல்ஸி ரோட்ரிகியூஸ் அறிவிப்பு :

வெனிசுலா நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வரும் மே 1ஆம் தேதி முதல் கணிசமான அளவில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என இடைக்கால அதிபர் டெல்ஸி ரோட்ரிகியூஸ் ((Delcy Rodriguez )) அறிவித்துள்ளார். தொழிலாளர்களின் நலனுக்காக எண்ணெய் மற்றும் சுரங்க தொழிலை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தென் அமெரிக்காவுக்கு எதிராக அமெரிக்காவின் தடையை முடிவுக்கு கொண்டு வர நாடு தழுவிய புனித நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் டெல்ஸி ரோட்ரிகியூஸ் அறிவித்துள்ளார்.

போர் மற்றும் புகைமூட்டத்தால் முடங்கிய சுற்றுலா தலங்கள் :

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால், தாய்லாந்தில் உள்ள யானைகள் பூங்காக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. யானைகள் தும்பிக்கையால் வளையங்களை சுழற்றுவது மற்றும் தூரிகை கொண்டு ஓவியம் வரைவது போன்ற சாகசங்களை செய்து காட்டினாலும், அதை கண்டு ரசிக்க தற்போது அங்கு மிகக்குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளனர்.

ஒரு நாளைக்கு சுமார் 200 சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், தற்போது இரு நாட்களுக்கு 3 பயணிகள் மட்டுமே வருவதாக பூங்கா நிர்வாகம் வேதனை தெரிவித்துள்ளது.

Source link