செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார்.. அப்போது பேசிய அவர் “ 2021-ல் உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்து இன்று இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம்.. இந்தியாவுக்கு வழிகாட்டுகிற மாடல் திராவிட மாடல் தான் என்று மாநிலத்தையே தலைநிமிர வைத்திருக்கிறோம்.. இந்த வளர்ச்சியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை..
அதிலும் இதுவரை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவதூறுகளை மட்டுமே பேசி வந்துள்ளார்.. இப்போது என் மரணத்தை பற்றி விரும்பி பேசி இருக்கிறார்.. மாதந்தோறும் உரிமைத் தொகை கொடுத்து 1 கோடியே 30 லட்சம் மகளிருக்கு துணை நிற்கக் கூடிய நான் இல்லாமல் போகணுமாம்..
முதல் நாள் முதல் கையெழுத்து போட்டு விடியல் பயணத்திற்கு உத்தரவிட்ட இந்த கை மண்ணுக்குள் போக வேண்டுமாம்.. தமிழ்நாட்டு குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்று காலை உணவு, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்களை நிறைவேற்றி அவர்களின் வெற்றியை கொண்டாடும் நான் கொரோனாவில் போயிருக்கணுமாம்.. யாருடைய ஆசை? பழனிசாமியின் ஆசை..
மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நலம் காக்கும் ஸ்டாலின் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் நான் இல்லாமல் போகணுமாம்.. பழனிசாமி அவர்களே.. இந்த உலகத்தில் மரணத்தை சந்திக்காத எந்த மனிதரும் இல்லை.. யாராக இருந்தாலும் மரணம் ஒரு நாள் வந்தே தீரும்.. இந்த ஸ்டாலினுக்கும் ஒரு நாள் மரணம் வரும்.. மண்ணில் புதைப்பார்கள்.. ஆனால் இந்த ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் ஒருவருக்கும் வராது.. அது தான் உண்மை.. இந்த திட்டங்கள் இருக்கும் வரை இந்த ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை ஆள்வான்..
1971-ம் ஆண்டு திமுகவின் மாணவரணி மாநாடு கோவையில் நடந்தது.. அந்த மாநாட்டில் 2 நிமிடம் பேச வாய்ப்பு கிடைத்தது.. மொழிக்காக போராடுகிறோம்.. போராடும் நேரத்தில் நமது உயிரை இழக்க கூடிய தியாகத்தை செய்ய காத்திருக்கிறோம்.. என் தந்தைக்கு 4 ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர்.. மொழிக்காக என் உயிர் போனாலும் என் தந்தை கவலைப்படமாட்டார். மொழிக்காக தனையனை இழந்த தந்தை என்று என் தந்தைக்கு பாராட்டு கிடைக்கும் என்று பேசினேன்.. இதெல்லாம் அரசியல் அழுக்காக இருக்கும் பழனிசாமிக்கு தெரியுமா?
இவ்வளவு பேசிவிட்டு நான் அப்படி பேசவே இல்லை என்று கூறியுள்ளார்.. கொரோனா காலத்தில் ஸ்டாலின் காணாமல் போனாரு என்று தான் சொன்னேன் என்று தெரிவித்துள்ளார்.. இப்படி பல்டி அடித்து அடுத்தை பொய்யை பேசி உள்ளார்.. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் களத்தில் இருப்பது தான் திமுக காரன். வாழ்க்கை முழுவதும் களத்தில் இருப்பவன் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. தலைமை தொண்டனாக இருக்கும் நான் கொரோனாவுக்கு பயப்படுவேனா..? என் உயிர் இருக்கும் வரை தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் உழைத்து கொண்டே தான் இருப்பேன்.. பழனிசாமி மட்டும் இல்ல.. ஆர்.எஸ்.எஸ் சாமிகள் கொடுக்கும் சாபங்கள் எங்களை ஒன்றும் செய்யாது..” என்று தெரிவித்தார்..
