யுவன் சங்கர் ராஜா பாடிய “டிஎன் 2026” படத்தின் வீடியோ பாடல் வெளியானது

நட்ராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘டிஎன் 2026’. இந்தப் படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தர்புர்கா சிவா இசையமைத்துள்ளார். படத்தில் நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் டீசரில் “சினிமாகார பயல்கள் தமிழ்நாட்டில் வாழலாம், ஆளலாமா?, நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா?, எம்ஜிஆர் எல்லாம் எப்படி முதல்வர் ஆனார்? எங்கள் தலைவருக்கும் அதே மாஸ் இருக்கிறது!” போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காண்கிறது. விஜய்யின் அரசியல் வருகையை விமர்சிக்கும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்று இருப்பது போல தெரிகிறது என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் காரசாரமாக பதிவிட்டு வருகிறார்கள். நட்டி நட்ராஜ்ஜின் தோற்றம் விஜய் போன்றும், தம்பி ராமைய்யாவின் தோற்றம் தவெக பொதுச்செயலர் என். ஆனந்த் போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டீசர் வெளியானதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் இந்த படம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘டிஎன் 2026’ படத்தின் செகண்ட் சிங்கிளான ‘ஹே அலங்கரி’ என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, பிரியங்கா பாடியுள்ளனர். பாடல் வரிகளை கார்த்திக் நேதா எழுதியுள்ளார். இந்த பாடல் சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Source link