இதை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்தது மேலும் அந்த சலவை கூடத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது தீப்பற்றி எரிந்த நிலையில் அதை அணைப்பதற்கு கூட தண்ணீர் வசதி அந்த சலுகை கொடுத்து இல்லை சலவைத் தொழிலுக்கு அடிப்படை தேவையே தண்ணீர் தான் இந்த நிலையில் அங்கு தண்ணீர் வசதி முழுமையாக கிடையாது மேலும் அவர்கள் பயன்படுத்தும் கழிவு நீர் செல்வதற்கு கூட சரியான வசதிகள் கிடையாது என்றார்
அதுபோக அதாவது கழிவுநீர் பிரச்சினை மட்டுமல்ல சுகாதாரமான கழிப்பறைகளை இல்லை கொஞ்சம் மழை பெய்தால் கூட அவர்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து வருவதாக வருத்தத்துடன் தெரிவித்தனர் என்றார் .தேர்தல் நடைமுறையில் இருப்பதால் எங்களால் எந்த உதவியும் செய்ய இயலாது எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நிவாரண நிதியில் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
கொதித்த விஜய்…திமுக மீது கடும் விமர்சனம்!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் தத்தனையில் வாழும் பொதுமக்கள் நிலைமையை ரொம்ப கஷ்டமாக உள்ளது என்று தெரிவித்தார் .மேலும் ஒரு மாத காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எடப்பாடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் அப்போது தொகுதி உள்ள அனைத்து குறைகளும் சரி செய்யப்படும் என்றார்
ஒரு மேயர் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று தான் இருந்திருக்கிறார் அடிப்படை வசதிகள் கட்டமைக்க வேண்டும் என்ற அளவுக்கு அவர்கள் யோசிக்கவில்லை என்றார் .ஒரு மேயர் எதிர்க்கட்சி வேட்பாளரால் நியமிக்கப்பட்டுள்ள அவர்களுடைய பிஏ மற்றும் கவுன்சிலர் இவுங்க எல்லாருமே ஜெயிலுக்கு போயிட்டு திரும்ப வந்துள்ளார்கள் .இவர்களை நியமிக்க காரணமாய் இருந்த அமைச்சர் இடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனால் அவர் நான் சுத்தம் என்று சொல்லி வருகிறார்
வெளியில் வந்துள்ள ஊழல் 200 கோடி. ஆனால் வெளியில் வராதது ஆயிரக்கணக்கான கோடி இருக்கும் என்று தெரிவித்தார் .மேலும் அந்த குற்றவாளிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர்கள் பேருக்கு கைதாகி தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார்கள் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள் அவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினர் மேலும் இந்த விஷயம் ஒரு நாள் வெளியே வரும் அன்று அனைவரின் முகத்தையும் கிழியும் என்று தெரிவித்தார்
நான் வெளியூரிலிருந்து வந்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள் அது பிசுபிசு என்று போய்விட்டது என்றார் .மேலும் திமுக நிறுத்தி உள்ள பல வேட்பாளர்கள் அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்களா என்று கேள்வி எழுப்பினார் .விருதுநகரில் விஜய பிரபாகரன் அவர்கள் போட்டியிடுகிறார் அது அவருடைய தொகுதியா என்று கேள்வி எழுப்பினார்
வெளியூர் என்ற குற்றச்சாட்டு பிசுபிசு என்று போனதால் நான் இறைச்சி கடையை மூடுவதாக பிரச்சாரம் செய்வதாக என் மேல் பொய்யான குற்றச்சாட்டை வைத்தனர் அதுவும் பொய்யாக போய்விட்டது என்றார் .இப்பொழுது புதிதாக ஒரு தயாரிப்பாளரை வைத்து என் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள் நான் பணம் வாங்கி வைத்துவிட்டு அவரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை என்று எழுந்துள்ளது
இரண்டு வருடங்களுக்கு முன்பாக இரண்டு சகோதரர்கள் மணி மற்றும் அசோக் இவர்கள் இருவரும் என்னை வைத்து ஒரு படம் எடுத்தார்கள் என்னுடைய ரசிகர்களாக இருந்தார்கள் என்னை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் அதனைத் தொடர்ந்து படம் பண்ணுவதற்காக என்னிடம் அட்வான்ஸ் தொகை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து படம் செட் பண்ணுவதற்கு அவர்கள் பணம் தருவதற்கு சற்று தாமதப்படுத்தினார்கள் அதனைத் தொடர்ந்து அவர்கள் அழைத்து தாங்கள் எப்போது பணம் தயார் செய்கிறீர்களோ அப்போது பணம் தயார் செய்யலாம் என்று அவர்களிடம் நான் தெரிவித்தேன் அதற்கு அப்புறம் அவர் வெளிநாடு சென்று விட்டார் அவருடைய சகோதரர் அசோக் என்னிடம் அடிக்கடி பேசி வந்தார் இந்த வழியில் திருவிளையாடலில் பழி சொல்லுவதற்காக ஆகா ஆரம்பிச்சிட்டீங்களா என்று தெரிவிப்பது போல் என் மீது புதிதாக பழி வந்துள்ளது.
அவர்கள் என் மேல் கொடுத்த புகார் நான் அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் திருப்பி தர மாட்டேன் என்று மிரட்டி வந்ததாக புகார் மனுவில் கூறியுள்ளனர் என்னிடம் அவர்கள் அட்வான்ஸ் திருப்பி கேட்டதாக ஒரு பதிவும் இல்லை அவர்களிடம் நான் தரமாட்டேன் என்று கூறியதாக ஒரு பதிவு காட்டட்டும் அப்படி எதுவுமே கிடையாது என்று தெரிவித்தார் இந்த குற்றச்சாட்டில் என் மீது நியாயம் உள்ளது இவர்கள் யாரோ எறியப்பட்ட அம்புகள் என்று தெரிவித்தார்.
