புதுச்சேரி: விசில் சின்னத்துக்கு ஓட்டுபோட்டதை வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. அப்போது வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் துறையின் உத்தரவை மீறி சிலர் செல்போனை வாக்குச்சாவடிக்குள் எடுத்து சென்றுள்ளனர்.

அங்கு த.வெ.க.வுக்கு விசில் சின்னத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்துவிட்டு, .வி.பாட் எந்திரத்தில் விசில் சின்னம் வரும் வரை வீடியோவாக செல்போனில் படம் பிடித் துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட் டுள்ளனர். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கனிடம் கேட்ட போது ‘சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வீடியோக்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Source link