தென்மாவட்டங்களை கவரும் விஜய்..கடலூர் பரப்புரை எங்கு, எப்போது? வெளியான முக்கிய விவரம்! – tvk leader vijay to campaign in cuddalore tomorrow apr 11 police grant permission

தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் உள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 21ஆம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகளுக்குப் பரப்புரை மேற்கொள்ள மிகவும் குறுகிய காலமே மீதம் உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

ஆதாவது இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்கள் தான் உள்ளது என்ற நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இரண்டு நகரங்களில் காலை, மாலை எனப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பின் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தினமும் பல தொகுதிகளில் வாகன பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

கொதித்த விஜய்…திமுக மீது கடும் விமர்சனம்!

அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தேர்தல் அறிவிப்பு பிறகு, மார்ச் 30ஆம் தேதி பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் தனது பரப்புரையைத் தொடங்கினார். மேலும் சென்னையில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளக் காவல் துறையினரிடம் இருந்து அனுமதி கேட்டு இருந்த நிலையில், ஒரு மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் சென்னை பரப்புரையை ரத்து செய்தார்.

விஜய் தேர்தல் பிரச்சாரம் தூத்துக்குடி

இதனைத் தொடர்ந்து தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வாகத் தென்மாவட்டங்களைக் குறிவைத்து பரப்புரையைத் தொடங்க ஆரம்பித்தார். அந்த வகையில் நேற்று திருநெல்வேலியில் நிர்வாகிகளை ஆதரித்து பிரம்மாண்ட பிரச்சாரத்தை நடத்தினார். விஜய் வருகை ஒட்டி அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பொதுமக்கள் என மேளதாளங்கள் முழங்கு உற்சாகமாக அவரை வரவேற்றனர்.

திருநெல்வேலியில் நடைபெற்ற தனது பிரச்சாரத்தைச் சிறப்பாக நிறைவு செய்து விஜய், அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்றார். அங்கு அவர் நடத்திய வாகன பேரணி தமிழகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது விஜய் நேரில் பார்க்க வேண்டும் என்றும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் சாலையில் இருபுறங்களிலும் மக்கள் பெரும் அளவில் திரண்டனர் தனது வாகனத்தில் நின்றபடி, பொதுமக்களுக்குக் கையசைத்து வணக்கம் தெரிவித்துக்கொண்டு விஜய் வாக்கு சேகரித்தார்.

கடலூரில் விஜய் ரோடு ஷோ அனுமதி

முக்கியமாக மீனவ குடியிருப்புகள் மற்றும் நகரின் முக்கிய சந்திப்புகளில் உற்சாகமாகப் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் உற்சாகத்தையும் பொதுமக்களின் ஆரவாரத்தையும் கண்டு மகிழ்ந்த விஜய், அவர்களுக்கு அன்பு நன்றி தெரிவித்தார். மொத்தத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் வாகன பேரணி ஒரு திருவிழா போலக் காட்சி அளித்தது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 9ம் தேதி கடலூரில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டு இருந்த நிலையில், காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்தது.

9-ம் தேதி புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதின் காரணமாக இந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 11-ம் தேதி அதாவது நாளை கடலூரில் பரப்புரை மேற்கொள்ளக் காவல் துறையினர் விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 10ம் தேதி சிவகங்கையிலும் 12ஆம் தேதி கன்னியாகுமரியிலும் விஜய் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளார். மேலும் காவல்துறையினர் தரப்பிலிருந்து 20 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடலூரில் பிற்பகல் இரண்டு மணி முதல் இரவு 10:00 மணி வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடலூர் மஞ்சக்குப்பம், வடலூர், விருத்தாசலம் புறவழிச்சாலை, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

Source link