ஈரான், லெபனான் மீதான இஸ்ரேலின் போருக்கு ரூ.1.6 லட்சம் கோடி செலவு

பெய்ரூட்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது.

இந்த போரால் மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. அதேவேளை, 2 வாரங்கள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவும், ஈரானும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதையடுத்து இருநாடுகள் இடையே நாளை பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதனால், போர் பதற்றம் தணியும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், லெபனானில் நேற்று முன்தினம் இஸ்ரேல் படைகள் அதிபயங்கர வான்தாக்குதல்களையும் நிகழ்த்தின. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை கண்டிராத அளவுக்கு நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்க முக்கிய தலைவர் உள்பட 250-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஈரான், லெபனான் மீதான இஸ்ரேலின் 40 நாள் போரில் 17.5 பில்லியன் டாலர் (ரூ. 1.6 லட்சம் கோடி செலவானதாக இஸ்ரேல் நிதியமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. ராணுவச் செலவுகள் 12.9 பில்லியன் டாலர் என்றும், ஈரானிய தாக்குதலால் ஏற்பட்ட சேதம் 4.5 பில்லியன் டாலர் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்புச் செலவுகள் பொருளாதார முடக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை.

Source link