அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை..! உதகையில் பரபரப்பு..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது.. 

அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்..

அதன்படி உதகையில் பாஜக வேட்பாளர் போஜரானை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொள்கிறார்.. இதற்காக ஹெலிகாப்டர் மூலம் அவர் உதகை சென்றார்.. அப்போது அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.. சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற சோதனைக்கு பின் பறக்கும் படையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்..

அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை.. தான் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அண்ணாமலை கட்சியின் தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பினர்.. இதையடுத்து பாஜக தலைமையும் அண்ணாமலைக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.. எனினும் கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் படி அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்..

அனல் பறக்கும் தேர்தல் களம்.. நாளை கடலூரில் பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி.. உதயநிதிக்கு மறுப்பு..!

Source link