விஜய் கடலூர் பிரச்சாரம்
அந்த வகையில் சென்னையில் நான்கு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள ஒரு மணி நேரமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்தார். இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களை தனது கட்சியை வலுப்படுத்தும் விதமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜய் வருகையால் தென் மாவட்டங்கள் ஸ்தம்பித்துள்ளது.
அந்த வகையில் இன்று காரைக்குடியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிற்பகல் 2 மணி அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை வந்தார் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை கடலூர் மாவட்டத்தில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்க்கொள்ள உள்ளார்.
கொதித்த விஜய்…திமுக மீது கடும் விமர்சனம்!
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மாற்றம்
இந்த நிலையில், நாளை கடலூர் மாவட்டத்தில் துணை முதலமைச்சரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.அதன்படி, கடலூர்,திட்டக்குடி, வடலூர் ,நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கூறப்பட்டது.
ஆனால் ஏற்கெனவே இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தமிழக வெற்றிக்கழகம் சார்ப்பில் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதி கேட்டு இருந்த நிலையில் காவல்துறை தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதனைத் தொடர்ந்து விஜய் நாளை கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனால் துணைமுதல்வர் உதயநிதிக்கு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறை கூறுவது என்ன?
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி , பரப்புரைக்கான அனுமதி வழங்கும்போது முதலில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பது வழக்கமாக உள்ளது. அந்த விதிப்படி விஜய் முன்னதாகவே அனுமதி கோரி விண்ணப்பித்திருந்ததால் அவருக்கு முதன்மை வழங்கப்பட்டது. இதனால், அதே நாளில் திட்டமிடப்பட்டிருந்த உதயநிதி ஸ்டாலினின் பிரச்சார நிகழ்ச்சி மாற்றம் செய்யப்பட்டது.
நிர்வாக காரணங்களும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் தேவையும் கருத்தில் கொண்டு, அவரது பிரச்சாரம் மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் இத்தகைய மாற்றங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளthu நிலையில், அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.குறிப்பாக, விஜய் வருகையால், திமுக , அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கூறப்படுகிறது.மேலும் விஜய் வருகையாக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
