40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

பிப்ரவரி 28, 2026 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில், தெஹ்ரான் உட்பட பல நகரங்களில் உள்ள ராணுவ மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன. ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது, இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

தெஹ்ரானில் உள்ள ஜம்ஹூரி பகுதி, இஸ்ஃபஹான், கோம், கரஜ், கெர்மான்ஷா, மற்றும் முக்கிய பெட்ரோ கெமிக்கல் ஆலைகள், அணு மின் நிலையங்கள், மற்றும் பள்ளி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் குறிவைக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், ஈரான் புரட்சிகர காவல் படையின் உயர் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. உலகளாவிய விளைவுகள்: ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது 2 வாரம் போர் நிறுத்ததை ஈரான், அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனாலும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வருவதால், போர் நிறுத்ததை வாபஸ் பெறுவோம் ஈரான் எச்சரித்துள்ளது. 

ஈரான், லெபனான் மீதான இஸ்ரேலின் 40 நாள் போரில் $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) செலவானதாக இஸ்ரேல் நிதியமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. ராணுவச் செலவுகள் $12.9 பில்லியன் என்றும், ஈரானிய தாக்குதலால் ஏற்பட்ட சேதம் $4.5 பில்லியன் எனவும் கணிப்பு. மறுசீரமைப்புச் செலவுகள், பொருளாதார முடக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை. இத்தனை பில்லியன் செலவு செய்தற்கு இஸ்ரேல் மக்கள் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

Source link