மகளிருக்கு மாதம் ரூ.3,000 பணம்.. பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வெளியீடு..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ இன்று வெளியிட்டார்.. ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், போதுமான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்தல், பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளது..

கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், மாநிலத்தில் காவி கட்சி (பாஜக) ஆட்சிக்கு வந்தால், ஆறு மாதங்களுக்குள் ‘பொது சிவில் சட்டம்’ (UCC) அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ‘சங்கல்ப் பத்ரா’ (Sankalp Patra) என்று அழைக்கப்படும் இந்தத் தேர்தல் அறிக்கை, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வழிகாட்டியாக அமைவதோடு, அவர்களுக்கு ஒரு புதிய திசையையும் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

“பிரதமர் மோடி கனவு கண்ட ‘வளர்ச்சியடைந்த இந்தியா’விற்கான செயல்திட்டத்தை, இந்தத் தேர்தல் அறிக்கை வங்காள மக்கள் முன் சமர்ப்பிக்கிறது… மக்கள் அச்சத்திலும், விரக்தியிலும் உள்ளனர். மக்கள் மனதார ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்,” என்று அமித்ஷா கூறினார்.

வங்காளத் தேர்தலுக்காக பாஜக தனது ‘சங்கல்ப் பத்ரா’வில் அளித்துள்ள வாக்குறுதிகள் பின்வருமாறு:

6 மாதங்களுக்குள் பொது சிவில் சட்டத்தை (UCC) அமல்படுத்தப்படும்

ஊடுருவல்காரர்களுக்கு எதிராக ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையைக் கடைப்பிடித்தல்

அடுத்த 45 நாட்களுக்குள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தப்படும்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 3,000 நிதியுதவி வழங்கப்படும்.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! இனி சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்த முடியாது..! இன்று முதல் புதிய விதிகள்..!

Source link