Annamalai About Udhayanidhi,எடப்பாடி பழனிசாமியை உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக பேசுகிறார்..முக ஸ்டாலின் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது : அண்ணாமலை – annamalai criticise udhayanidhi stalin speech about edappadi palanisamy

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்ததாக பல வதந்திகள் வந்துகொண்டு இருந்தன. ஒருகட்டத்தில் இவர்களின் கூட்டணி தொடராது என்பது போல பேசப்பட்டது. இதுபோல பல வதந்திகள் வந்தாலும் மீண்டும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியே தொடர்கின்றது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் திமுக கூட்டணியை விரும்பவில்லை என சொல்வதாக தகவல்கள் உண்டு. மேலும் தவெக கட்சியுடன் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் கூட்டணி வைக்க ஆசைப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

ராகுல் காந்தியே ஒரு மனதாக காங்கிரஸ் -திமுக கூட்டணியை விரும்பியதாக கூட தெரியவில்லை என கருத்துக்கள் வந்துகொண்டு இருக்கின்றன. இப்படியான நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த அண்ணாமலை திமுக -காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதாக கூறியிருக்கின்றார். அதாவது புதுச்சேரியில் ராகுல் காந்தி பரப்புரை செய்கின்றார். ஆனால் அந்த பரப்புரையில் முக ஸ்டாலின் பெயரையே ராகுல் காந்தி குறிப்பிடவில்லை.

திமுக -காங்கிரஸ் கூட்டணி குழப்பம்

அதைப்போல முக ஸ்டாலினும் தனது பரப்புரையில் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிட்டு பேசுவதில்லை. இதிலிருந்தே அவர்களின் கூட்டணிக்குள் ஏராளமான குழப்பங்கள் இருப்பது தெரிய வருகின்றது. ஆனால் எங்களுடைய கூட்டணி ஒற்றுமையாக இருக்கின்றோம். அனைவரும் ஒன்று இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார் அண்ணாமலை.

மேலும் களத்தில் தவெக, நாம் தமிழர் கட்சி என பலர் இருக்கலாம். ஆனால் போட்டி என்பது திமுகவிற்கும் அதிமுக கூட்டணிக்கும் தான் என அண்ணாமலை அடித்து சொல்கின்றார். இந்நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் மாறி மாறி விமர்சனம் செய்துகொண்டது பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. திமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து பேசுவதாக திமுக தரப்பு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சை கண்டித்து வருகின்றனர். அதைப்போல பாஜகவின் அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கடுமையாக கண்டித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் தரம் குறைவாக பேசி வருகின்றார். ஆனால் முக ஸ்டாலின் இதைப்பற்றி பேசாமல் வேறு எதைப்பற்றியோ பேசிக்கொண்டு இருக்கின்றார்.

முக ஸ்டாலின் நான் கொண்டுவந்த திட்டங்களை மண்ணில் புதைக்க பார்க்கின்றனர் என கூறுகின்றார். எடப்பாடி பழனிச்சாமி அப்படி பேசவில்லை. அவர் வேறு அர்த்தத்தில் பேசினார். ஆனால் முக ஸ்டாலின் என் திட்டங்களை மண்ணில் புதைக்கின்றார்கள் என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அண்ணாமலை.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியது சர்ச்சையாகியிருக்கும் நிலையில் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கின்றார். அதோடு முதலமைச்சர் முக ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன கருத்தை வேறு விதமாக மாற்றி பேசியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார் அண்ணாமலை. இவ்வாறு பரப்புரையில் பரிமாறப்படும் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

அண்ணாமலை கருத்து

இந்நிலையில் அண்ணாமலை கருத்துக்களை கருத்துக்களால் அடிக்க வேண்டும் என கூறியிருக்கின்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் கொளத்தூர் பரப்புரை குறித்து அவர் எதுவும் பேசவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கொளத்தூர் பரப்புரையில் தான் கொரோனா காலகட்டம் குறித்து பேசினார். அதுதான் மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. அதன் பிறகு நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்றும் தவறாக முக ஸ்டாலின் குறித்து பேசவில்லை என்றும் விளக்கம் கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனாலும் அவரின் விளக்கத்தை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அண்ணாமலை திமுகவினரின் பேச்சு தான் சரியில்லை, தரக்குறைவாகவும், மிரட்டும் வகையிலும் அவர்கள் பேசுவதாக அண்ணாமலை கூறியிருக்கின்றார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் கருத்தை திரித்து வேறு விதமாக அவர்கள் பேசுகின்றனர் என அண்ணாமலை சொல்கின்றார்.

ஆனால் இதுவும் மக்களால் அந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளும் கருத்தாக இல்லை. ஒட்டுமொத்தத்தில் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்த்து அரசியல் ரீதியாக இவர்களின் பரப்புரை இருந்தால் நன்றாக இருக்கும் என்பது தான் பெரும்பாலான மக்களின் கருத்தாக இருக்கின்றது. ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை தவிர்த்து திட்டங்கள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் பேசினால் அதனை மக்கள் ஏற்றுக்கொண்டால் கண்டிப்பாக வாக்குகளாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link