லக்னோ,
ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. லக்னோ அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி பெற்றுள்ளது.
வரும் 12ம் தேதி லக்னோ அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் லக்னோ அணி வீரர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
