அதிமுகவுக்கு குறி வைக்கும் விஜய்! செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அசைன்மென்ட்? – cm vijay’s plan to sengottaiyan’s secret talks will 15 aiadmk mlas join tvk,

சமீபத்தில் நடந்த முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு கட்சியின் பலத்தை காட்டிவிட்டது. குறிப்பாக திமுக, அதிமுக மோதிய களத்தில் தவெக-வும் புதிய பாடத்தை கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.காரணம், தவெகவுக்கு எதிராக திமுக , அதிமுக போட்டு போட்டுக்கொண்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இடைத்தேர்தல் தேர்தல் கணக்கு

இதனை தவிடுப்பொடியாக்கும் வகையில் இடைத்தேர்தலில் எந்தவொரு முதல்வரும் இதுவரை செய்யாத வகையில் முதல்வர் விஜய் வீதிக்கு வீதி பிரச்சாரம் மேற்க்கொண்டார். இருப்பினும் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றது. மேலும் திமுக 2வது இடத்தை பிடித்தது. மேலும் திமுகவுக்கு சட்டசபை தேர்தலை காட்டிலும் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.

EPS-க்கு ஆதரவின் அளவு: மக்கள் கருத்துக்கள் !

ஆனால், கடந்த கால தேர்தல்களில் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்ட 2 தொகுதிகளிலும் அதிமுக தன்னுடைய பலத்தை இழந்தது. ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழப்பார்கள் என்ற முதல்வர் விஜய்யின் கணிப்பு பொய்த்துபோனது. மேலும் இரட்டை இலைக்கு இன்னும் வாக்கு வங்கி இருக்கிறது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா செல்வாக்கு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில் தான் விஜய்யின் கணக்கு மாறியுள்ளதாம். திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் அதிமுகவின் மொத்த வாக்கு வங்கியும் தவெக பக்கம் வர வேண்டும் என விஜய் கணக்கு போட்டுள்ளாராம்.

அதிமுக இரண்டாக பிரிந்திருக்கும் நிலையில் ஒரு அணியின் ஆதரவு மட்டும் போதாது, மொத்த அணியையும் இழுக்க வேண்டும் என்பதே விஜய்யின் திட்டமாம். எம்.ஜி.ஆர் போல தொடர் வெற்றிகளை குவித்து நிலையான ஆட்சியை கொடுக்க இதுவே வழி என தவெக வட்டாரம் கருதுகிறதாம்.

களத்தில் செங்கோட்டையன்!

இந்த மெகா ஆபரேஷனை நடத்தும் பொறுப்பு மூத்த தலைவர் செங்கோட்டையனிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “உடனே ஆபரேஷனை தொடங்குங்கள்” என விஜய் உத்தரவிட, செங்கோட்டையன் அதிமுகவுக்குள் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளாராம்.

15 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்பதன் பின்னணி?

“மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் தவெக பக்கம் வருவார்கள்” என செங்கோட்டையன் கூறியதும், “அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தவெக-வில் இணைவார்கள்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததும் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஆதரவு அளிப்பதுடன் நின்றுவிடாமல், ஒட்டுமொத்த அணியும் தவெகவுடன் இணைந்து திமுக Vs தவெக என்ற நேரடி மோதலை உருவாக்குவதே விஜய்யின் பிரதான வியூகமாகக் கூறப்படுகிறது.

விஜய்யின் இந்த அதிரடித் திட்டம் தேர்தலில் பலன் தருமா? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துமா? தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் இதனுள் மறைந்துள்ளதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்

Source link