பிராட்வே பகுதியில் மழைநீர் அகற்றும் பணிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று இரவு சென்னை மாநகராட்சிப் பகுதியில் கனமழை பெய்து வருவதை ஒட்டி ராயபுரம் மண்டலம், பிராட்வே குறளகம் சந்திப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியை பார்வையிட்டார். பின்னர் பருவமழை பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போதுமாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி .எஸ். சமீரன், இஆ.ப., இணை ஆணையர் பணிகள் செ.சரவணன் ,இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையர் ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., மண்டல உதவி ஆணையர் சத்திய நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
