மேற்கு வங்கம்: துர்கா பூஜையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 பேர் உயிரிழப்பு

எழுதியவர், ஜார்ஜ் ரைட்

பிரசுரிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக குறைந்தபட்சம் 19 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் திடீரென பெய்த மழையின் போது நிகழ்ந்தது. மழையிலிருந்து தப்பி பாதுகாப்பான இடத்தைத் தேடி மக்கள் ஒரே நேரத்தில் நகர முயன்றதே நெரிசலுக்கு காரணமாக இருந்ததாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, உயிரிழந்தவர்களில் ஏழு வயது சிறுமியும் ஒருவர் எனத் தெரிவித்தார். மேலும், 25 பேர் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்த சம்பவத்தை “துயரமானது” என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு உதவி வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுவேந்து அதிகாரி கூறினார்.

துர்கா பூஜையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 பேர் மரணம்

மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம், மழை தொடங்கிய பின்னர் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பு காரணமாக கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

அதன் பின்னர் மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு, இழுத்துக்கொண்டு, முன்னோக்கி விரைந்ததால் பலர் கீழே விழுந்து, கூட்ட நெரிசல் விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவில் இல்லாமை மற்றும் கூட்ட நிர்வாகத்தில் குறைபாடுகள் காரணமாக, மத விழாக்கள் உட்பட பெரிய மக்கள் கூடங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியாவில் அரிதானவை அல்ல.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் நடந்த இந்து மதக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்தனர்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link