தலைநகர் சென்னையில் ஒரே நாளில் அதிக மழை பெய்து அதிர்ச்சியூட்டியுள்ளது. வானிலை ஆய்வாளர்கள், வானிலை ஆய்வு மையம் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் இரவு முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் ஐஏஎஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முக்கியமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் அதி தீவிர மழை பெய்துள்ளது. அதாவது 20 செ.மீக்கு மேல் மழை கொட்டி தீர்த்திருக்கிறது. இதையடுத்து 12 இடங்களில் 11.5 செ.மீக்கும் மேல் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பாரீஸ் பகுதியில் 36.3 செ.மீ மழை கொட்டி தீர்த்திருக்கிறது. இவ்வளவு மழைக்கு மத்தியிலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் முழு வீச்சில் தங்களது பணியை செய்துள்ளனர். அதுவும் களத்திற்கு சென்று தேங்கிய மழைநீரை அகற்றும் பணியிலும், மழைநீர் தேங்காமலும் நடவடிக்கை எடுத்தனர். பல இடங்களில் இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. இன்று காலை 6 மணிக்குள் அனைத்து சுரங்கப் பாதை பகுதிகளிலும் வெள்ளநீர் அகற்றப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Source link
