பெங்களூரு உபர், ரேபிடோ பயணம்: மழை, டிராபிக்கில் காஸ்ட்லி- மிஸ் ஆகும் BMTC, நம்ம மெட்ரோ – bengaluru public transit fails commuters during cbd event rushes and rain

கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலங்களில் டாக்ஸி பயணம் மிகவும் காஸ்ட்லியாக மாறிவிடுகிறது. சில சமயங்களில் அதிக கட்டணம் செலுத்த தயாராக இருந்தாலும் டாக்ஸிகள் கிடைப்பதில்லை. இதனால் அரசு பொதுப் போக்குவரத்து மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

அக்டோபர் 17 முதல் 20 வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை. பெங்களூருவில் இருந்து வெளியூர் புறப்படும் மக்களால் கடந்த வெள்ளி அன்று இரவு மாநகர் முழுவதும் திக்குமுக்காடி போனது. நகருக்குள் இருந்து வெளியே வருவதற்கு 4 முதல் 5 மணி நேரம் வரை ஆனதாக அதிர்ச்சியூட்டுகின்றனர். இதற்கிடையில் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் செல்வதற்காக கேப் புக் செய்தால் கட்டணம் தாறுமாறாக எகிறி நிர்ணயம் செய்யப்படுகிறது.

பெங்களூரு டிராபிக் – கேப் புக்கிங் சிக்கல்

சிலர் அதிக கட்டணம் செலுத்த முன்வந்தாலும் கேப் வந்து சேர்வதற்குள் படாத பாடு பட வேண்டியுள்ளது. அடுத்தடுத்து கேன்சல் ஆகி புக்கிங் செய்யவே நேரம் நீண்டு விடுகிறது. இந்த சூழலில் டைம்ஸ் ஆஃப் இந்தியா சமீபத்தில் நடந்த கள ஆய்வில் கேப் புக்கிங்கில் ஒரு கிலோமீட்டருக்கு 100 ரூபாய்க்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

இவ்வளவு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் சாதாரண மக்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது. இந்த சூழலில் பெங்களூரு மாநகரப் பேருந்துகள், நம்ம மெட்ரோ ஆகிய பொதுப் போக்குவரத்து வசதிகள் போதிய அளவில் இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

2 கி.மீ தூரத்திற்கு வசூலிக்கப்படும் கேப் கட்டணம்

மொபைல் ஆப் வாகனம் வெள்ளி அன்று கட்டணம்
(ரூபாயில்) சனி அன்று கட்டணம்
(ரூபாயில்) உபர் ஆட்டோ 123 105 உபர் ஏசி அல்லாத கேப் 202 202 உபர் ஏசி கேப் 221 221 ரேபிடோ ஆட்டோ 95 96 ரேபிடோ ஏசி அல்லாத கேப் 237 255 ரேபிடோ ஏசி கேப் 253 272 நம்ம யாத்ரி ஆட்டோ 90 66 நம்ம யாத்ரி ஏசி அல்லாத கேப் 292 196 நம்ம யாத்ரி ஏசி கேப் 330 200

பெங்களூரு போக்குவரத்து நெருக்கடியை எப்படி சமாளிக்கலாம்?

மழை காலங்கள், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரம், தொடர் விடுமுறை நாட்களில் பெங்களூரு மெட்ரோ ரயில் சேவைக்கான அட்டவணையை பிரத்யேகமாக மாற்றி அமைக்கலாம். அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு ரயில் சேவையை அதிகப்படுத்தலாம். நம்ம மெட்ரோ ரயில் சேவையை வழக்கமான 5 நிமிடங்களுக்கு பதிலாக 3 நிமிடங்கள் என நெருக்கடி காலகட்டங்களில் மாற்றலாம். பெங்களூரு மாநகரப் பேருந்து சேவையை பொறுத்தவரை இரவு முதல் நள்ளிரவை தாண்டி பயன்பாட்டிற்கு விடலாம். மக்கள் அதிக அளவில் காத்திருக்கும் பேருந்து நிறுத்தங்களில் இருந்து ஜங்ஷன்கள், பேருந்து நிலையங்களுக்கு குறுகிய லூப் சர்வீஸ் பேருந்து சேவையை அறிமுகம் செய்யலாம். மழை காலங்களில் நம்ம மெட்ரோ, பெங்களூரு மாநகரப் பேருந்து, பெங்களூரு போக்குவரத்து காவல்துறை என மூன்று நிர்வாகங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ரியல் டைம் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலை ஆராய்ந்து, அதற்கேற்ப போக்குவரத்து சேவையை அமல்படுத்தலாம்.

Source link