தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக சென்னையில், நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் தாம்பரம், டி நகர் உள்ளிட்ட பல்வேறு பெரு நகர பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கி உள்ளது இதனால் போக்குவரத்து பாதிப்பு தடைபட்டுள்ளது.
2026-ல திமுக vs தவெக தான்..! EPSக்கு 10% கூட வராது
நீர்மட்டம் மற்றும் கொள்ளளவு விவரங்கள்
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியாகும். தற்போது ஏரியின் நீர்மட்டம் 14.21 அடியாக உள்ளது.
ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். தற்போதைய நிலவரப்படி ஏரியில் 1,390 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
தற்போதைய நீரை மட்டும் வைத்து இறுதி முடிவுக்கு வர முடியாது என்பதால், வரும் மழைப்பொழிவு மற்றும் நீர்வரத்து மிகவும் முக்கியமானது.
நீர்வரத்து அதிகரிப்பு
நேற்று வரை ஏரிக்கு விநாடிக்கு 576 கன அடியாக இருந்தநீர்வரத்து, இன்று 655 கன அடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது இது விநாடிக்கு 79 கன அடி கூடுதலாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் இப்பகுதியில் 54 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மழையும் நீர்ப்பிடிப்புப் பகுதி வரத்தும்தான் நீர்மட்டத்தைத் தீர்மானிக்கின்றன.
தண்ணீர் வெளியேற்றம் மற்றும் கண்காணிப்பு
ஏரியில் இருந்து தற்போது குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக விநாடிக்கு 203 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏரியில் வெள்ளநீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை என்றும், வெளியேறும் நீர் முழுக்க முழுக்க குடிநீர் தேவைக்கே என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் நீர்மட்டம், வரத்து மற்றும் வெளியேற்றத்தை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 3.64 டிஎம்சி கொள்ளளவுகொண்டது 24 அடி ஆழமுடையது. கனமழையால் ஏரி நிரம்பியதை அடுத்து கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் நேரில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
கணவனின் போது வினாடிக்கு 750 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் மழை குறைந்ததால் வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கண்ணாடியாக குறைக்கப்பட்டது.
இலையில் ஏரியில் நீர் படிப்பு பகுதியில் மீண்டும் கொட்டும் மழை காரணமாக ஏரிக்க நீர் வரத்து அதிகரித்தது இதனால் ஏறியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.
அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்
ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அளவு 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்போது நிலவரப்படி ஏரியில் நீர்மட்டம் 23 அடியாக உள்ளது.
சென்னையில் கடந்த 2தினங்களில் 50 மழை பெய்துள்ள நிலையில், ஒருவேலை நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் திறக்கப்படும் நீரின் அளவு உயர்த்தப்படும் அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
